தங்கம் விக்கிற விலைக்கு இனிமே வாங்க முடியுமா? - இது இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் ஒலிக்கும் சாமானியனின் ஆதங்க குரல். ஆனால் இப்போதைய விலையே உச்சம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தை நிபுணர்கள் பலரும் குறுகிய காலத்தில் செல்லிங் அழுத்தம் இருக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என பலரையும் பதற்றமடைய செய்கிறார்கள்.
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழல், பொருளாதார மாற்றங்கள் என அனைத்தும் சேர்ந்து தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிவிட்டன. விலை குறையும் போது வாங்கலாம் என்று காத்திருந்த பலருக்கு, ஏறிக்கொண்டே போகும் சார்ட் ஆனது ஏமாற்றத்தையே தந்து கொண்டிருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் அடுத்த ஒரு வருட பயணம் எப்படி இருக்கப்போகிறது? இப்போதே முதலீடு செய்து லாபத்தை அள்ளலாமா அல்லது விலை குறையும் வரை பொறுமை காக்க வேண்டுமா? உலகளாவிய சந்தை வல்லுநர்களின் அதிரடி கணிப்புகளையும், முதலீட்டாளர்கள் இப்போதே செய்ய வேண்டிய அந்த மாஸ்டர் பிளான் என்ன என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.
பலரின் மனதிலும் தற்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி, தங்கம் விலை 5,000 டாலர்களை எட்டுமா, வெள்ளி விலை 90 டாலர்களை எட்டுமா என்பது தான். குறிப்பாக ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான பிரச்சனையானது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், தங்கம் விலை அடுத்து எங்கு செல்லுமோ என்ற கேள்வியானது எழுந்துள்ளது. முதலீட்டு தேவையானது அதிகரித்து வரும் இந்த சூழலில், தங்கம், வெள்ளிக்கான சப்ளையும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. குறிப்பாக வெள்ளியின் சப்ளையானது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பானது அழுத்தத்தில் காணப்படும் சூழலில், தங்கம் விலையானது உச்சத்தை எட்டி வருகிறது. பலவீனமான டாலரானது தங்கத்தை குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் ஸ்பாட் தங்கத்தின் விலை 1% அதிகரித்து, 4,717.82 டாலராக காணப்படுகிறது.
அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் ஈரான் போரானது முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், பங்குச் சந்தையும் மீண்டு வர தொடங்கியுள்ளது. போரானது முடிவுக்கு வரும் பட்சத்தில் இது தங்கத்தின் மீதான முதலீட்டு தேவையை குறைக்கலாம். இருப்பினும் நிபுணர்கள் தங்கத்தின் நீண்ட கால இலக்கை நிபுணர்கள் 5,000 டாலராக கணித்துள்ளனர். வெள்ளியின் இலக்கானது 90 டாலரை நோக்கி நகரலாம் என்றும் கணித்துள்ளனர்.
கடந்த மாதம் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ரோலர் கோஸ்டர் பயணமாக அமைந்தது. இது 2008-க்கு பிறகு தங்கம் மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் ஏப்ரல் 1ம் தேதியான இன்று ஈரான் போரானது விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற செய்தியை அடுத்து, மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா அல்லது மீண்டும் சரியுமா என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு, பணவீக்கம் எதிர்பார்ப்பு, புவிசார் அரசியல் பதற்றம் உள்ளிட்ட காரணிகள் உள்ளிட்ட காரணிகளும் தங்கம் விலையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பலவீனமான டாலர் மதிப்பு தங்கத்தை மலிவானதாக மாற்றி உள்ளது. வெள்ளி விலையும் சற்று சரிந்திருப்பது, தொழில் துறை உலோகத்தை வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இது நீண்ட கால அடிப்படையில் இவ்விரு உலோகங்கள் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் தங்கத்தின் விலை போக்கானது வட்டி விகிதம் மற்றும் நிச்சயமற்ற அரசியல் பதட்டங்களை பொறுத்து இருக்கலாம். குறிப்பாக தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங்காக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிக வட்டி விகிதமானது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டை குறைக்க வழிவகுக்கலாம். நடப்பு ஆண்டில் வட்டி குறைப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போருக்கு முன்னதாக நடப்பு ஆண்டில் இருமுறை வட்டி குறைப்பு இருக்கலாமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போரினால் அந்த நம்பிக்கை உடைந்து போனது. தற்போதைய சூழலில் போரானது விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியுள்ளது. அப்படி போர் முடிவுக்கு வந்தால், வட்டி குறையலாம். வட்டி குறைந்தால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழலில், மத்திய வங்கிகளும் தொடர்ந்து தங்கத்தை கொள்முதல் செய்து, மேலும் தங்கம் விலையை தாங்கி பிடித்துக் கொண்டுள்ளன. இருப்பினும் தற்போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், ஈரான் அமைதி பேச்சு வார்த்தையானது இதற்கு முன்னதாகவும் நடந்தது. ஆனால் அவை பாதியிலேயே முறிந்தன. ஆக தற்போது நடக்கும் இந்த பேச்சு வார்த்தையும் முடிவுக்கு வருமா என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. ஒரு வேளை பேச்சு வார்த்தையானது மீண்டும் இழுபறியானால், சந்தையில் விலை ஏற்றம் மீண்டும் தொடங்கலாம்.
ஆக முதலீட்டாளர்கள் தற்போதைய சூழலில் முதலீட்டை பிரித்து முறையாக செய்வது அவசியம். தங்கம், வெள்ளியை சிறந்த ஹெட்ஜிங்காக பயன்படுத்தலாம். தொடர்ந்து வட்டி விகித நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். புவிசார் அரசியல் பதற்றங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவே தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications

