இப்பவே தங்கம் (Gold) விலை விண்ணை தொடுதே.. இனிமேல் வாங்கவே முடியாதோ என சாமானிய மக்கள் புலம்பி கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு பேரதிர்ச்சியை தந்துள்ளார்கள் பொருளாதார நிபுணர்கள். உலக நாடுகளின் கடன் சுமை மற்றும் போர் பதற்றங்களால், அடுத்த ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 6,000 டாலரைத் தொடும் என சாக்ஸோ வங்கி (Saxo Bank) கணித்துள்ளது.
இந்திய மதிப்பில் இது பல மடங்கு உயர்வை எதிர்பார்க்கும் நிபுணர்கள், டாலர் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால், உலக நாடுகள் அனைத்தும் தங்கத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டன. தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அதுதான் எதிர்காலத்தின் உண்மையான கரன்சி என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? அடுத்த 12 மாதங்களில் தங்கம் விலை எந்த எல்லைக்கு செல்லும்? முழுமையாக தெரிந்து கொள்வோமா?

தங்கம் விலையானது 5,000 டாலர்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பானது சமீபத்திய காலமாக நிலவி வந்தது. இந்த நிலையில் சாக்ஸோ வங்கியானது அடுத்த ஆண்டுக்குள் தங்கம் விலையானது 6,000 டாலர்களை எட்டலாம் என கணித்துள்ளது. இதற்கு சர்வதேச கடன் நெருக்கடி, பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது குறித்து இவ்வங்கி நிபுணர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தங்கம் விலையானது சமீபத்தில் குறைந்தது சரிவுக்கான அறிகுறி அல்ல. இது ஒரு பெரிய வளர்ச்சிக்கான சுழற்சி. இந்த ஆண்டு தங்கன் விலை 5,000 டாலர்களை கடக்கும்போது, தொடர்ந்து பெரிய அளவில் அதிகரிக்கும். ஒரு வேலை இந்த லெவலை உடைத்தால் அடுத்த ஆண்டு இதிலிருந்து 10 - 15% அதிகரிக்கலாம். சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 6,000 டாலர்களை தாண்டும் என்றும் கணித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா- இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, எரிவாயு உள்கட்டமைப்புகள்; பலத்த சேதமடைந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியிலும் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையானது தாறுமாறாக ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் பணவீக்க அச்சத்தில் உள்ளன.
இது பாதுகாப்பு முதலீடான தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்களை நகர்த்தலாம். இதுதான் ஏற்கனவே நடந்து கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாதத்தில் தங்கம் விலையானது 13% குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் ஈக்விட்டியில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைவுக்கவும் ஈடுகட்டவும் தங்கத்தை விற்பனை செய்தனர். மேலும் அமெரிக்க டாலர் மதிப்பும் இந்த காலகட்டத்தில் வலுவடைந்து காணப்பட்டது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. இந்த சூழலில் தான் மார்ச் மாதம் தங்கம் விலையானது சரிந்து காணப்பட்டது. இதேபோன்று வெள்ளி விலையும் 23% அளவுக்கு வீழ்ச்சி கண்டு காணப்பட்டது.
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட முதலீட்டு விதிகள் இனிமேல் செல்லாது என எச்சரிக்கும் நிபுணர்கள், உலகம் இப்போது பணப்புழக்க பிரச்சினையிலிருந்து விலகி, பணவீக்க அதிர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி சரிவு என்ற புதிய பிரச்சனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஈரான் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக உலக அலுமினிய உற்பத்தியில் 10% இந்த பிராந்தியத்தில் தான் நடக்கிறது. இங்குள்ள தொழிற்சாலைகள் மூடப்படுவதால், அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்து உற்பத்தி செலவு அதிகரிக்கும். இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியை முடக்கும்.
உலக நாடுகளின் நிதிப்பற்றாக்குறை, குறிப்பாக அமெரிக்காவின் நிதி நிலை மற்றும் அதிகரித்து வரும் கடன் அளவு தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் நீண்ட கால காரணியாக இருக்கும். இந்த கடனை அடைக்கத் தெளிவான தீர்வுகள் இல்லாதது முதலீட்டாளர்களை பயமுறுத்துகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க டாலர் மீதான உலகளாவிய ஆதிக்கம் குறைந்து வருவதும், உலக நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கம் போன்ற உறுதியான சொத்துக்களை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். தற்போதைய நிலை தொடர்ந்தால் தங்கம் விலையானது வருடத்திற்கு 10 -155 ஏற்றம் காணலாம். தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். தங்கத்தோடு ஒப்பிடும்போது வெள்ளி விலை மாறுபடலாம். இருப்பினும் அதிகரித்து வரும் தொழில் துறை தேவையை பொறுத்து அதன் விலை மாறும்.
மொத்தத்தில் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், நடுத்தர காலத்தில் விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications

