ஜூன் மாத இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா? தங்கம் விலை போக்கு எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிவடைந்து தான் வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் முடிவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கிறது. இந்த 10 நாட்களுக்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் செல்லுமா என்ற எதிர்பார்த்து மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜூன் 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,500 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,16,000 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து படிப்படியாக குறைந்த தங்கம் இந்த மாதத்திலேயே குறைந்தபட்ச விலையாக ஜூன் 11ஆம் தேதி அன்று ஒரு கிராம் 13,500 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையை எட்டியது. ஜூன் ஒன்றாம் தேதியுடன் ஒப்பிடும்போது ஜூன் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 1000 ரூபாய் விலை சரிவடைந்தது ஒரு சவரனுக்கு 8000 விலை குறைந்தது. அந்த வகையில் இந்த மாதத்திலேயே ஜூன் 11ஆம் தேதி அன்று தான் தமிழ்நாட்டில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,08,000 ரூபாய் என்ற குறைந்த பட்ச விலைக்கு விற்பனையானது.

ஜூன் மாத இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா?

இதன்பிறகு ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து தங்கம் விலை லேசாக உயர்ந்தது. ஆனால் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை குறைய தொடங்கியது. அந்த வகையில் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,08,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி நிலவரத்தோடு ஒப்பிடும்போது ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 900 ரூபாயும் ஒரு சவரனுக்கு 7,200 ரூபாயும் சரிவடைந்து இருக்கிறது.

ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தங்கம் விலை 6.21% சரிவை சந்தித்துள்ளது. இதனை 10 நாட்களுக்கு 3 % என பிரித்து இதே டிரெண்ட் அடுத்த 10 நாட்களும் தொடரும் பட்சத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை மேலும் 3% குறையும் வாய்ப்பு ஏற்படும். அதாவது தங்கம் விலை ஒரு கிராம் 13,180 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,05,440 ரூபாயாகவும் மாறும். தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்ல வேண்டும் என்றால் ஒரு கிராம் தங்கம் விலை 12,500 ரூபாய்க்கு கீழ் செல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

தற்போதைக்கு ஈரான் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. ஈரான் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது அவ்வாறு மூடினால் பல்வேறு பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா பதிலடி தந்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தையில் ஒரு குழப்பமான சூழல் காணப்படுகிறது. தற்போது தங்கத்தின் முதலீடு செய்வதா அல்லது மீண்டும் கச்சா எண்ணெய் மற்றும் டாலரில் முதலீடு செய்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

இதனால்தான் கடந்த செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு வர்த்தக நாட்களிலும் ஆபரண தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. சனிக்கிழமை ஆன நேற்று ஒரு கிராமுக்கு 30 ரூபாய் என லேசான விலை உயர்வு கண்டது. இனி வரும் நாட்களில் ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் எந்த திசையில் செல்ல போகிறதோ அதற்கேற்ப தான் தங்கம் விலையின் போக்கும் இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+