2025ஆம் ஆண்டு தங்கத்திற்கான ஆண்டு எனக் கூறும் அளவிற்கு தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது . பல்வேறு சர்வதேச காரணிகள் மற்றும் உள்நாட்டு தேவைகள் இந்தியாவில் தங்கத்தின் விலையை பல மடங்கு உயர்த்தி விட்டன. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிட்டது. சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
இனி வரும் மாதங்கள் எப்படி இருக்கும் , புது ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கக்கூடிய சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து இதேபோல ஏற்றத்திலேயே இருக்குமா அல்லது சரிவை சந்திக்குமா என மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்திருக்கின்றன . இந்த சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பாபா வாங்கா வெளியிட்டு இருக்கக்கூடிய கணிப்பு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.

உலக அளவில் இருக்கக்கூடிய தீர்க்கதரிசிகளில் ஒருவராக பாபா வாங்கா கருதப்படுகிறார் . இவரது கணிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமானவை. ஏனென்றால் பல்வேறு உலக நிகழ்வுகளையும் முன்கூட்டியே இவர் கணித்திருக்கிறார், இவர் கணித்த பெரும்பாலான நிகழ்வுகள் அவர் கூறியதைப் போலவே நடந்திருக்கின்றன.
பாபா வாங்கா பல்கேரியாவை சேர்ந்தவர், 1911 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன்னுடைய 12 வது வயதில் பார்வையை இழந்தார். அதிலிருந்து தான் இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக சொல்லப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு சுனாமி நிலநடுக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, ரஷ்யா உக்ரைன் மோதல் போன்றவற்றை பாபா வாங்கா முன்கூட்டியே கணித்தவர்.
இத்தகைய சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறித்து இவர் வெளியிட்டு இருக்கும் கணிப்பு பேசுபொருளாக மாறி இருக்கிறது. பாபா வாங்கா வெளியிட்டுள்ள கணிப்புகளின் படி 2026 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மிகப் பெரிய அளவிலான ஒரு நிதி பிரச்சனை ஏற்படும், வங்கி சார்ந்த மற்றும் பணம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டு பாரம்பரிய நிதி அமைப்புகள் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் எனக் கூறியிருக்கிறார். அவ்வாறு பாரம்பரிய நிதி அமைப்புகள் சிக்கலை எதிர்கொள்கிறது என்றால் நிச்சயம் அது தங்கத்தின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
இதற்கு முன்பு இது போன்ற நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்ட போது தங்கத்தின் விலை 20 இலிருந்து 50% வரை உயர்ந்திருக்கிறது . அப்படி பாபா வாங்கா கூறும் கருத்தை கொண்டு பார்த்தால் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 25 லிருந்து 40% வரை உயரும். 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் அதாவது அடுத்த ஆண்டில் இந்தியாவில் 124 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் 1,62,000 முதல் 1,80,000 ரூபாய் வரை எட்டும். பங்குச்சந்தை சரிவு, கரன்சிகள் மதிப்பு குறைவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்றும் அதனால் தங்கம் விலை உச்சமடையும் என்றும் இவருடைய கணிப்புகள் பூதாகரத்தை ஏற்படுத்தியுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications