2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.
தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் இரண்டு வாரங்களாக குறைந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

அடுத்த ஆண்டில் எவ்வளவு உயரும்?: இத்தகைய சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து உலகின் முன்னணி தனியார் வங்கியான ஜே பி மார்கன் பரபரப்பான ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,000 டாலர்களுக்கு மேல் செல்லும் என்ற அதிர்ச்சியான தகவலை ஜேபி மார்கன் வெளியிட்டு இருக்கிறது.
எவ்வளவு சதவீதம் உயரும்: 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 5,200 டாலரில் இருந்து 5,300 டாலர்கள் என்ற நிலையை எட்டும் என ஜே.பி.மார்கன் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான அலெக்ஸ் வோஃல்ப் தெரிவித்திருக்கிறார் . அதாவது தற்போதைய விலையை விட தங்கத்தின் விலை 25 சதவீதம் அதிகரிக்கும் என்பதே ஜேபி மார்கன் வெளியிட்டிருக்கும் கணிப்பாகும்.
சென்னை,மதுரை, திருச்சியில் இன்று தங்கம் விலை என்ன?
ஆபரணத் தங்கம் விலை எவ்வளவு: சர்வதேச சந்தையில் தங்கம் விலை 25% உயர்கிறது என்றால் உள்நாட்டிலும் அதே போன்ற ஒரு விலை உயர்வை நாம் காண முடியும். அந்த வகையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 12,764 ரூபாயாக இருக்கிறது இதில் 25% உயர்வு என்றால் ஒரு கிராம் சுமார் 15,800 ரூபாயை எட்டும். அப்படி என்றால் ஒரு சவரன் 1,26,000 ரூபாயை எட்ட கூடும். 22 கேரட் ஆபரண தங்கம் என பார்க்கும் போது ஒரு கிராம் இன்று 11,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் 25% உயர்வு என்றால் ஒரு கிராம் சுமார் 14,625 ரூபாய்க்கும் ஒரு சவரன் விலை 1,17,000 ரூபாய் என்ற நிலையையும் எட்டும்.

என்ன காரணம்: 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை உயரும் என கணிப்பதற்கு சில காரணங்களையும் ஜேபி மார்கன் வெளியிட்டு இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணிகள் இருந்தாலும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகம் வாங்கியது ஒரு முக்கிய காரணமாக இருந்தது . 2026 ஆம் ஆண்டிலும் இதே நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது.
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கும் அந்நிய செலாவணி இருப்புகளுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் இருப்பு குறைவாகவே உள்ளது என கூறும் அலெக்ஸ் வோல்ஃப் மத்திய வங்கிகள் இன்னும் தங்கத்தை வாங்கும் இதன் காரணமாக விலை உயரும் என்பதே எங்களுடைய கணிப்பு என கூறுகிறார். இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை மத்திய வங்கிகள் 634 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கின்றன என உலக தங்க கவுன்சில அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது 700 ல் இருந்து 900 டன்கள் வரை எட்ட கூடும் என சொல்லப்படுகிறது .
அடுத்த ஆண்டு தங்கம் விலை: இதில் பெரும்பாலான பகுதி சீன மத்திய வங்கியால் தான் வாங்கப்பட்டிருக்கிறதாம். அமெரிக்காவை மையமாகக் கொண்ட நிதிச் சந்தைகளில் இருந்து உலகை திசை திருப்ப வேண்டும் , டாலரின் மதிப்பை வலுவிழக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சீனா அதிக தங்கத்தை வாங்கி வைக்கிறது . அதே போல கோல்ட்மேன் சாக்ஸும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 4900 டாலர்கள் வரை உயரும் என தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications