Gold Rate: தங்கத்தை காலி செய்யப்போகும் அமெரிக்கா.. இறங்கி ஆடும் சீனா.. இனி தங்கம் விலை என்னாகும்?!

ஈரான் - அமெரிக்கா போர், சவுதி - யெமன் நாட்டின் ஹவுதி படை மத்தியிலான போர், ஹார்முஸ் மற்றும் பாம் அல் மண்டெப் வழித்தடம் முடக்கம், ரஷ்யா எண்ணெய் தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல் என அடுத்தடுத்து எண்ணெய் சப்ளையை பாதிக்கும் நிலை உருவாகியிருக்கும் காரணத்தால் இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் வரையிலும், WTI கச்சா எண்ணெய் விலை 104.8 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது.

இதேபோல் நாளை அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட உள்ளது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு + அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது ஆகியவற்றின் மூலம் வட்டி விகிதம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 Gold Rate: தங்கத்தை காலி செய்யப்போகும் அமெரிக்கா.. இறங்கி ஆடும் சீனா.. இனி தங்கம் விலை என்னாகும்?!

தங்கம் விலை

இவ்விரு முக்கிய காரணத்தால் முதலீட்டு சந்தையில் தங்கம் விலை என்பது சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 0.40 சதவீதம் குறைந்து 4,284.90 டாலர் வரையில் குறைந்துள்ளது. பொதுவாக வட்டி விகிதம் உயர்ந்தால் முதலீட்டு சந்தையில் இருக்கும் பெரும் பகுதி முதலீடுகள் பத்திர சந்தைக்கு (ரிஸ்க் இல்லாமல் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்பதால், ஏற்கனவே 10 ஆண்டு பத்திர முதலீட்டின் லாபம் 5 சதவீதத்தை தொட்டுள்ளது.) செல்லும் இதனால் தங்கம் விலை தானாக குறையும்.

பெடரல் ரிசர்வ் முடிவு

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது 2 நாள் நாணய கொள்கைக் கூட்டத்தை செப்டம்பர் 15 - 16 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இந்த வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் பெட் தலைவர் கெவின் வார்ஷ் செப்டம்பர் 16ஆம் தே்தி புதன்கிழமை அமெரிக்க நேரத்தின் படி பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளது.

CME FedWatch Tool தரவின்படி, இந்த முறை கூட்டத்தில் 0.25 சதவீதம் வட்டி உயர்வுக்கு சுமார் 92% வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர். இதேபோல் மோர்கன் ஸ்டான்லி இந்த ஆண்டு இறுதிக்குள் 2 முறை வட்டி விகிதம் உயர்த்தப்படும் என கணித்துள்ளது.

இதேவேளையில் தங்கம் விலை சரிவை சீன மக்களும், சீன முதலீட்டாளர்களும் பெரிய அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சீனாவின் ஆட்டம்

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு எதிர்பார்ப்பு தங்கம் விலை மீது பெரும் அழுத்தம் கொடுத்தாலும், சீனாவின் மத்திய வங்கியும், சீன முதலீட்டாளர்களும் தங்கத்தை வாங்குவதை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

சீனாவின் மத்திய வங்கியாக திகழும் People's Bank of China ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. அக்டோபர் 2023க்கு பின்ரு இது அதிகப்படியான ஒரு மாத அளவீடாகும். இதுமட்டும் அல்லாமல் People's Bank of China தொடர்ந்து 22 மாதங்களாக தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் மொத்த இருப்பு 2,387 டன்னாக உயர்ந்துள்ளது.

இதேவேளையில் சீனாவில் Gold ETF-களில் அந்நாட்டு முதலீட்டாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளல காரணத்தால் சுமார் 11 டன் தங்கம் கூடுதலாக சேர்ந்துள்ளது. இதன் மூலம் சீன Gold ETF-களின் மொத்த தங்க கையிருப்பு 293 டன் ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்திலும் சீன முதலீட்டாளர்கள் Gold ETF-களில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் வட்டி உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் குறைந்தாலும், டாலர் மதிப்பு உயர்வு, சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் டிமாண்ட் ஆகியவற்றின் மூலம் தங்கம் விலை தேக்க நிலைக்கு செல்லலாம். மேலும் ஏஐ மேம்பாட்டை Slow Down செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதால் ஏஐ முதலீடுகளும் பாதிக்கப்பட்டு உலகளாவிய பங்குச்சந்தையை சிக்கலான நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த மாதம் மொத்த முதலீடு சந்தையும் தேக்க நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+