இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? இப்போது தங்கம் வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா?

செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களிலும் தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் சுமார் 98 ஆயிரம் ரூபாயை நெருங்கியது . அவ்வளவுதான் இனி தங்கத்தை நாம் வாங்க முடியாது தங்க நகைகளை நாம் கனவில் தான் நினைத்துப் பார்க்க முடியும் என சாமானிய மக்கள் கண்ணீர் சிந்தினர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையிலிருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையை பொருத்தவரை தங்கம் விலை என்பது கடந்த அக்டோபர் 1இல் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 10950 ரூபாயாக இருந்தது. இதனை அடுத்து படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 17ஆம் தேதி 12,200 ரூபாய் என வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இறுதியாக நேற்றைய தினம் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,500 என்ற விலையில் வந்து நிற்கிறது.

இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? இப்போது தங்கம் வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா?

ஒரு சவரன் என பார்க்கும்போது தங்கத்தின் விலை அதன் வரலாறு காணாத உச்சத்தில் இருந்து சுமார் உச்சத்திலிருந்து தற்போது 5000 ரூபாய்க்கு மேல் சரிவடைந்து இருக்கிறது. தொடர்ந்து இரண்டு மாதங்களாக ஏறி வந்த தங்கம் தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வரக்கூடிய சூழலில் வரும் வாரம் எப்படி இருக்கும், இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா , தங்க நகை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் தற்போது தங்கம் வாங்கலாமா அல்லது வேண்டாமா , மேலும் விலை குறையுமா என குழப்பத்தில் உள்ளனர்.

முதலில் தங்கம் விலை உயர்வுக்கான அடிப்படை காரணங்களை நாம் தெரிந்து புரிந்து கொள்வது அவசியம். சர்வதேச பொருளாதார சூழல்கள் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் . அமெரிக்க அரசாங்கத்தின் வரிவிதிப்பு கொள்கைகள் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். மத்திய வங்கிகள் அதிக அளவு தங்கத்தை வாங்கி குவிப்பது இரண்டாவது காரணம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவக்கூடிய போர் பதற்றம் ,அமெரிக்க பொருளாதார நிலை அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் உலக அளவில் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி இடம் பெற செய்தது. இதுவே தங்கம் விலை உயர்வதற்கு முக்கிய காரணம்.

தற்போது இந்த காரணிகள் அனைத்தும் அப்படியே தான் இருக்கின்றன .அப்படி என்றால் ஏன் தற்போது தங்கம் விலை குறைந்தது என்ற கேள்வி எழலாம். தங்கம் விலையை பொருத்தவரை அதன் வரலாறு காணாத உச்சத்தை எட்டிவிட்டது என கருதி உலக அளவில் முதலீட்டாளர்கள் பலரும் லாபம் பார்க்கத் தொடங்கினர் இதுதான் தங்கத்தின் விலை குறைவுக்கு முக்கிய காரணம். சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டில் லாபம் பார்த்ததும் தீபாவளி பண்டிகை முடிந்திருப்பதும் தேவை குறைந்து தங்கத்தின் விலை குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இனி வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? இப்போது தங்கம் வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா?

தங்கம் விலை வரும் நாட்களில் என்ன ஆகும் என்பது தான் தற்போது பலரது மனதிலும் இருக்கக்கூடிய கேள்வி, தங்கம் விலையை பொறுத்தவரை தற்போது அதன் வரலாறு காணாத உச்சத்திலிருந்து சற்றே குறைந்து ஓய்வு நிலையில் இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர் . தங்கம் விலை உயர்வுக்கான அனைத்து காரணிகளும் அப்படியே தான் நீடிக்கின்றன என்பதால் தங்கம் மேற்கொண்டு ஏறுமுகத்தை நோக்கி திரும்பும் என்பதை நம்மால் தவிர்க்க முடியாது என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைக்கு தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது அதாவது தங்கம் விலை உயர்வு என்பது ஓய்வில் இருக்கிறது ஓய்வு முடிந்தவுடன் அது மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறத் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் இந்த வாரம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானால் மீண்டும் தங்கம் விலை உயரும். இல்லை எனும் போது தங்கத்தின் விலை மேற்கொண்டு உயர்வதற்கான வாய்ப்பு இல்லை .

சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்பது 4,992 டாலர்கள் என்ற வரம்பை கடந்து விட்டால் அதனை அடுத்து மிக வேகமாக உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவே நான்காயிரம் டாலருக்கும் கீழ் சென்று விட்டது எனும் போது நிச்சயம் தங்கம் விலை குறையும் என தெரிவிக்கின்றனர். எனவே அடுத்து வரக்கூடிய வாரம் அமெரிக்க பணவீக்க அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை கொண்டு தங்கம் விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் .

அமெரிக்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது ,பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர், புவிசார் மோதல்கள் முடிவுக்கு வருகிறது ,அமெரிக்க டாலர் வலுப்பெறுகிறது என்றால் தங்கம் விலை குறையும். இருந்தாலும் 90 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் ஒரு சவரன் தங்கம் குறையுமா என்பது சந்தேகம்தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+