இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா? – சர்வதேச நிலவரம் என்ன சொல்கிறது?

சர்வதேச அளவிலான பொருளாதார சூழல்கள் தான் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றன. பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போது எல்லாம் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் ,நாடுகளின் மத்திய வங்கிகளும் பாதுகாப்பான முதலீடாக இருக்கக்கூடிய தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். இதுதான் தங்கத்திற்கான டிமாண்ட்டை அதிகரித்து அவற்றின் விலையையும் உயர்த்துகிறது.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச அளவில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது . 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் சங்கத்தின் விலை 1500 டாலர்களாக மட்டுமே இருந்தது தற்போது அது 3,400 டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் எட்டு மாத காலத்திற்குள்ளேயே தங்கத்தின் விலை 125 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 50 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் 180 சதவீதம் லாபம் கிடைத்திருப்பதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா? – சர்வதேச நிலவரம் என்ன சொல்கிறது?

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு டிராய் அவுன்ஸ் 3500 டாலர்கள் என்ற வரலாறு காணாத உச்சத்தை கடந்த ஏப்ரல் மாதமே எட்டிவிட்டது. ஜூன் 7ஆம் தேதி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 3,310 டாலர் என்ற அளவில் விற்பனையாகிறது. கோல்டுமேன் சச்ஸ் என்ற உலகப் புகழ் பெற்ற நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி தற்போது மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வைக்கின்றன. எனவே தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும் என தெரிவிக்கிறது.

தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 3700 டாலர்கள் என்ற அளவை எட்டும் என்றும் ஒருவேளை அமெரிக்க ரெஷிஷன் ஏற்படுகிறது எனும்போது 3880 டாலர்கள் வரை இது உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவடைவது ,வங்கிகள் டெபாசிட்டுகளுக்கு வழங்கக்கூடிய வட்டி விகிதங்கள் குறைப்பு மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக அனைவருமே தங்கத்தை நோக்கிதான் படையெடுப்பார்கள் என கோல்ட்மேன் சச்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,500 டாலர்கள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டிய போது ஜே பி மார்கன் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை 4000 டாலர்களை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருந்தது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன.

State Street Global Advisors, நிறுவனத்தின் மூத்த ஆய்வாளராக இருக்கக்கூடிய ஜார்ஜ் மில்லிங் ஸ்டான்லி அளித்துள்ள பேட்டியில் தற்போது சர்வதேச அளவில் நிலவக்கூடிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மை தங்கத்தின் விலையை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தான் வைத்திருக்கும் என கூறுகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3,900 டாலர்கள் வரை உயரும் என கூறியுள்ளார்.

hedge fund manager ஜான் பால்சன் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து சங்கத்தை வாங்கி இருப்பு வைத்த வண்ணம் இருக்கின்றன அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது எனவே தங்கம் ஒரு அவுன்ஸ் விலை 2028 ஆம் ஆண்டுக்குள் 5,000 டாலர்கள் என்ற அளவை எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். Atlantic House Fund Management இன் முன்னாள் தலைவரும் கடந்த 30 ஆண்டுகளாக தங்கம் தொடர்பான முதலீட்டில் ஈடுபட்டிருக்கும் சார்லி மாரீஸ் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 7000 டாலர்களை எட்டும் என தெரிவித்திருக்கிறார்.சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் நிச்சயம் இந்தியாவில் தங்கத்தின் விலையில் அது எதிரொலிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+