தங்கத்தின் விலை, ராக்கெட் மீது ஏறிக் உட்கார்ந்து கொண்டு பறக்கிறது. 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 45,320-க்கு விற்கப்படுகிறது.
22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் 41,540-க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை, 50,000 ரூபாய் என்கிற புதிய உச்சத்தைத் தொடுமா என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.
யாருக்கு எல்லாம்
சாதாரண பாமர மக்கள், தங்கள் மகன் மகள் திருமணம் செய்ய தங்கம் வாங்க வேண்டும் என்பதால் அவர்கள் தங்கத்தின் விலை போக்கை கவனிக்கிறார்கள். மற்ற முதலீடுகள் எல்லாம் அத்தனை நல்ல வருமானத்தைக் கொடுக்கவில்லை என்பதால், லட்சக் கணக்கில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும் பணக்காரர்கள், தங்கத்தில் இருந்து எவ்வளவு லாபம் வரும் என தெரிந்து கொள்ள 10 கிராம் தங்கத்தின் விலை 50,000 ரூபாயைத் தொடுமா..? என்கிற கேள்வி எழுந்து இருக்கிறது.
சமீபத்தைய விலை ஏற்றம்
கடந்த மார்ச் 3, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 43,790 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் அடுத்த நாளே (மார்ச் 4, 2020) அன்று அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 45,310 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக ஒரே நாளில் சுமாராக 1,500 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்க ஃபெட் ரேட்
இது போக, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி, பொருளாதாரத்தை மேம்படுத்த, தன் வட்டி விகிதங்களை 0.5 % குறைத்து இருக்கிறது. இதுவும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் பணம் போட மிக முக்கிய காரணமாக இருக்கிறது. நிறைய தங்கத்தில் பணம் போடுகிறார்கள் என்றால், தங்கத்தின் விலை அதிகரிக்கத் தானே செய்யும்.
கொரோனா வைரஸ்
10 கிராம் தங்கத்தின் விலை 50,000 ரூபாயைத் தொடுவது அத்தனை எளிதல்ல, ஆனால் கொரோனா வைரஸ் அந்த விலை ஏற்றத்தைப் பார்த்துக் கொள்ளும் எனச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். உலக அளவில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றே சொல்கிறார்கள்.
டெக்னிக்கல்
தங்கத்தின் டெக்னிக்கல் சார்ட்டைப் பார்க்கும் போது, எல்லா டிரெண்டுகளும், பேட்டன்களும் தங்கத்தின் விலை, மேலும் அதிகரிக்கும் என்றே சொல்கிறதாம். 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கூடிய விரைவில் 50,000-த்தை தொடலாம். எனவே மக்கள் இப்போதே உஷாராகிக் கொள்ளவும்.
2019-ல் விலை ஏற்றம்
2019-ம் ஆண்டில் ஜனவரி 01, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 35,380 ஆக இருந்தது. இந்த ஜனவரி 01, 2020 அன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,750 ரூபாயாக அதிகரித்தது. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமார் 15 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.
2020-ல் விலை ஏற்றம்
ஜனவரி 01, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,750 ரூபாய்க்கு விற்றது. இன்று அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,320 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆக 2020-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு உள்ளேயே சுமாராக 11.2 சதவிகிதம் தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. இதே போக்கில் போனால் 10 கிராம் தங்கத்தின் விலை, 50,000-த்தை அசால்டாக தொட்டு விடும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.
உலக சந்தை நிலவரம்
உலக சந்தையில் கடந்த 2011-ம் ஆண்டு வாக்கில் தங்கத்தின் விலை 1,900 அமெரிக்க டாலரைத் தொட்டது. கொரோனா வைரஸ் முறையாக கட்டுப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் இந்த உச்ச விலையைத் தங்கம் தொட நிறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார் அனலிஸ்ட் நிகம் அரோரா.
முதல் சுற்று
தங்கத்துக்கு 8 - 10 வருடங்கள் தான் சுழற்சி காலங்களாக இருக்கிறது. அதன் அடிப்படையில் 1993 - 2001-ம் ஆண்டு வரை பெரிய விலை ஏற்றங்கள் இல்லை. ஜூன் 2001 - நவம்பர் 2011 வரை ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் முதல் 2,600 ருபாயைத் தொட்டதாம். ஆக இந்த 11 வருட காலத்தில் சுமார் 6.5 மடங்கு விலை அதிகரித்து இருக்கிறது.
இரண்டாம் சுற்று
கடந்த முறை 2001 - 2011 வரையான விலை ஏற்றத்தில் 6.5 மடங்கு விலை அதிகரித்து இருக்கிறது என்றால், இந்த முறை ஒரு 10 சதவிகிதம் விலை ஏற்றம் காணாதா.? என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுகிறது. எனவே மக்களே தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருப்பதாகவே செய்திகள் வருகின்றன. எனவே தங்கத்தை வாங்குபவர்கள் கவனமாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் ஒரு மேட்டரா
கடந்த முறை 2001 - 2011 வரையான விலை ஏற்றத்தில் 6.5 மடங்கு விலை அதிகரித்து இருக்கிறது என்றால், இந்த முறை ஒரு 10 சதவிகிதம் விலை ஏற்றம் காணாதா.? என்கிற அடிப்படைக் கேள்வியும் எழுகிறது. எனவே மக்களே தங்கத்தின் விலை அடுத்த சில மாதங்கள் அதிகரிக்க நிறைய வாய்பு இருப்பதாகவே செய்திகள் வருகின்றன. எனவே தங்கத்தை வாங்குபவர்கள் கவனமாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications