தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதால் புதிய சிக்கல்..! என்ன செய்ய போகிறது மோடி அரசு?

உலகிலேயே சீனாவுக்கு அடுத்ததாக அதிக அளவில் தங்கம் வாங்கும் ஒரு நாடு இந்தியா. இந்தியர்கள் பாரம்பரியமாகவே தங்கத்தை நகைகளாக வாங்கி பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள். அந்த வகையில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு தங்க சந்தையாக இந்தியா இருக்கிறது.

இந்தியா தனக்கு தேவையான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்நிலையில் ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் கைவசம் இருக்கும் அமெரிக்க டாலரை சேமிக்கவும் மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்கவும் மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது.

தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியதால் புதிய சிக்கல்..! என்ன செய்ய போகிறது மோடி அரசு?

மே மாதம் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகமானது. தங்கம் விலையும் உயர்வு கண்டது. தற்போது போர் சூழல் தணிந்திருப்பதால் அரசு இந்த இறக்குமதி வரியை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தங்கம் மீதான இறகுமதி வரியை உயர்த்தியதால் தங்க கடத்தல் அதிகரித்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் , நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் சுமார் 247.07 கிலோ கடத்தல் தங்கத்தையும், 585.48 கிலோ கடத்தல் வெள்ளியையும் கைப்பற்றியுள்ளது என மக்களவையில் மத்திய அரசே தரவுகளை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு 80 கிலோவாக இருந்த கடத்தல் தங்கம் பறிமுதல் இந்த காலாண்டில் 247 கிலோவாகவும், 50 கிலோவாக இருந்த கடத்தல் வெள்ளி பறிமுதல் 585 கிலோவாகவும் உயர்ந்துள்ளது.

Also Read

குறிப்பாக மே 13 அன்று தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்திய பின்னர் தங்கம், வெள்ளி கடத்தல் அதிகரித்ததாக கூறுகிறது. மே 13 முதல் ஜூன் 30 வரை மட்டும் 161 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே சுங்க துறையினரும், வருவாய் புலனாய்வு இயக்குநரகமும் கடத்தலை தடுக்கத் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக வர்த்தக துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களவையில் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

வரலாற்று ரீதியாக, தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகமாக இருக்கும் போதெல்லாமே தங்கம் கடத்தலும் அதிகரிக்க தான் செய்கிறது. இந்நிலையில் தான் கேரள தங்கம் மற்றும் வெள்ளி வணிகர்கள் சங்கம் சட்டப்பூர்வமான நகை வணிகத்தை பாதுகாக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அப்துல் நாசர், இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட பிறகு தங்கம் மற்றும் வெள்ளி கடத்தல் பெருமளவு அதிகரித்துள்ளது, குறிப்பாக, வெள்ளி கடத்தல் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகளே காட்டுகின்றன என்கிறார்.

Recommended For You

சட்டப்பூர்வமாக வணிகம் செய்யும் நகைக்கடைக்காரர்கள் அதிக விலை கொடுத்து தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக வரி விதிப்பால் சட்டப்பூர்வ இறக்குமதி குறைந்துள்ளது, இறுதியில் அரசின் வரி வருவாயை தான் பாதிக்கும் என கூறுகிறார். எனவே மத்திய அரசு, இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வேளை நகை வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம், வெள்ளி விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் தங்கம் 13,215 ரூபாய்க்கு ஒரு சவரன் 1,05,720 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+