உலக நாடுகள் டாலரை தவிர்த்துவிட்டு தங்கத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நாம் ஒரு புதிய பொருளாதாரச் சுழற்சியின் தொடக்கத்தில் நிற்கிறோம். வரலாறு நமக்குத் தரும் தரவுகளின்படி (GSR), தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு உச்சத்தைத் தொட தயாராகி வருகிறது. வரும் 2028 முதல் 2038 வரையிலான காலகட்டத்தில், எந்த நேரத்தில் வெள்ளியை வாங்க வேண்டும், எப்போது அதை தங்கமாக மாற்ற வேண்டும் என்ற கணிப்புகளையும், அதன் பின்னணியில் உள்ள வரலாற்று நிலவரங்களையும் பற்றி இந்த பதிவானது விளக்குகிறது.
சமீபத்தில் X தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவில், தங்கம் மற்றும் வெள்ளி இடையேயான விலை விகிதத்தை (Gold-Silver Ratio - GSR) அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்த உலோகங்களின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து கணித்துள்ளது. இது குறித்து Potassium_PhD எனும் அந்த பயனர் சில முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துள்ளார்.

வரலாற்று ஒப்பீடு (2008 vs 2025)
கடந்த 2008ல் தங்கம்-வெள்ளி விகிதம் (GSR) 82.9 ஆக இருந்தபோது, அடுத்த 29 மாதங்களில் தங்கம் 92% உயர்ந்தது, ஆனால் வெள்ளி 386% உயர்ந்தது. அதேபோல் 2025 அக்டோபரிலும் இந்த விகிதம் சரியாக 82.9 என்ற நிலையை எட்டியுள்ளது. ஆக வரலாற்று ரீதியாக பார்த்தால், வெள்ளி விலையானது இனி வரும் காலங்களில் தங்கத்தை விட பல மடங்கு வேகத்தில் வளரும் என கூறுகிறார்.
இலக்குகள் (2028 மற்றும் 2038)
கணிப்பின் படி, அடுத்த சில ஆண்டுகளில் தங்கம் மற்றும் விலைகள் எந்த அளவுக்கு ஏற்றம் காணலாம் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். வரும் 2028-ல் வெள்ளி ஒரு அவுன்ஸ் $250-க்கும், தங்கம் $9,250-க்கும் செல்லலாம். 2038-ல் (இறுதி உச்சம்): வெள்ளி $1,700 மற்றும் தங்கம் $62,900 வரை கூடச் செல்லலாம் என்ற கணிப்பையும் கொடுத்துள்ளார்.
முதலீட்டுத் தந்திரம்!
மேற்கண்ட இந்த விலை கணிப்பின் மத்தியில், இதை வெறும் முதலீடாகப் பார்க்காமல், ஒரு கேம் பிளான் ஆக பார்க்கவும் கூறியுள்ள X பயனர், தற்போதைய சூழலில் வெள்ளியை வாங்க வேண்டும். ஏனெனில் ஜி.எஸ்.ஆர் 80-க்கு அருகில் இருப்பதால் வெள்ளி மலிவாக உள்ளது. இதுவே 2028-ல் ஜிஎஸ்ஆர் 37-க்கு குறையும் போது, வெள்ளியை விற்றுத் தங்கமாக மாற்ற வேண்டும். மீண்டும் 2032ல் தங்கத்தை விற்று வெள்ளியாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
ஏன் இந்த உயர்வு?
டாலர் வீழ்ச்சி: உலக நாடுகள் நிச்சயமற்ற சூழலில் இருக்கும் டாலரை, முதலீட்டில் தவிர்த்து விட்டு தங்கம் பக்கம் திரும்பி வருகின்றன. இது தொடர்ந்து தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
பொருளாதார நெருக்கடி: பணவீக்கம் மற்றும் உலகளாவிய போர் பதற்றங்கள் காரணமாக மக்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கம்/வெள்ளியில் முதலீடு செய்கின்றனர். இதுவும் விலை உயர்ந்த உலோகங்கள் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சுருக்கமாக சொன்னால் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இதுவரை ஏற்றம் கண்டதெல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல. பொற்காலம் தொடங்கி விட்டதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்போது வெள்ளியில் முதலீடு செய்து, சரியான கால இடைவெளியில் அதை தங்கமாக மாற்றுபவர்கள், வருங்காலத்தில் மிகப்பெரிய முதலீட்டாளர்களாக மாறுவார்கள் என்பதுதான் அந்த ட்வீட்டின் முக்கிய செய்தியாகவும் இருக்கிறது.
தற்போதைய நிலவரம்?
தற்போதைய நிலவரப்படி, தங்கம் - வெள்ளி விகிதமானது 66.24 என்ற நிலையில் காணப்படுகிறது. இதன் பொருள், 1 அவுன்ஸ் தங்கம் வாங்குவதற்கு தற்போது 66.24 அவுன்ஸ் வெள்ளி தேவைப்படுகிறது. பொதுவாக ஜி எஸ் ஆர் விகிதமானது 70-க்கு மேல் இருந்தால் தங்கம் விலை அதிகம், வெள்ளி மலிவு என்று கருதப்படுகிறது. இது வெள்ளி வாங்குவதற்கான நேரத்தைக் குறிக்கும். இதுவே 40-க்கு கீழ் குறைந்தால் தங்கம் மலிவு, வெள்ளி விலை அதிகம் என்று கருதப்படுகிறது. இது வெள்ளியை விற்றுத் தங்கமாக மாற்றுவதற்கான நேரத்தைக் குறிக்கும். ஆக தற்போது இந்த விகிதம் 66.24 லிருந்து கீழ்நோக்கிச் சரிவது, வெள்ளியின் ஏற்றத்திற்கான தொடக்கத்தைக் காட்டுகிறது. இது 2028-ல் 37:1 என்ற நிலையை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்த விகிதமானது குறைந்தால் வெள்ளியில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கலாம்.
இருப்பினும் இந்த கணிப்பானது ஒரு தனிப்பட்ட நபரின் கருத்து என்பதால், முதலீட்டாளர்கள் அதை அப்படியே தொடர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆக சரியான நிபுணர்களின் ஆலோசனையுடன் முதலீட்டை திட்டமிடுதல் சிறப்பு.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications