டெல்லி: நாடு முழுவதும் சீரான ஒரு வரி நடைமுறை இருக்க வேண்டும் என்பதற்காக தான் ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரிமுறையில் குறிப்பிட்ட சில சேவைகளுக்கும் பொருட்களுக்குமான வரியை குறைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எப்பொழுது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தாலும் குறிப்பிட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு அதிகரிக்கும். கூடிய விரைவில் 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5%, 12%, 18%, 28% என்ற அளவில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 3% ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது.

இத்தகைய சூழலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு சூசகமான ஒரு பதிலை தெரிவித்து இருக்கிறார் . ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் சார்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜிஎஸ்டி வரி விகிதங்களை மறுக்கட்டமைப்பு செய்வது மற்றும் குறிப்பிட்ட சில வரிகளை குறைக்க வேண்டும் என நீண்ட காலமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, எப்பொழுது அது நடைபெறும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமித்த கருத்தை பெற்று மிகவும் எளிமையான மற்றும் அனைவரும் எளிதில் அணுகக் கூடிய வகையிலான ஒரு கட்டமைப்பை கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது , நாங்கள் அதை செய்வோம் என தெரிவித்திருக்கிறார் . மேலும் பட்ஜெட்டுக்குப் பிறகு இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என கூறியுள்ளார்.
ஒவ்வொரு பொருளுக்கும் எந்த விகிதத்தில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது , அதற்கான வரி அடுக்குகள் என்னென்ன என்பதை எல்லாம் நானே நேரடியக நிறைய நேரம் செலவிட்டு ஆய்வு செய்து இருக்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை மறு கட்டமைப்பு செய்யும்போது ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறையும் என்றே நான் நம்புகிறேன் அதற்காக தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம் என பதில் அளித்துள்ளார். ஜிஎஸ்டி வரி அமைப்பு மிகச்சரியாக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜூலை மாதத்தில் 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், நடைபெற இருக்கிறது. இதில் வரி விகிதங்களை மாற்றி அமைப்பது உள்ளிட்டவை குறித்து முக்கியமான ஆலோசனைகள் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications