சாமானிய மக்களின் மிக விருப்பமான கனவு, தங்களால் முடிந்த ஒரு பொட்டு தங்கத்தையேனும், தன் சந்ததிகளுக்கு வாங்கி சேமிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அனுதினமும் ஏற்றம் கண்டு வரும் தங்கம் ஒரு புறம் என்றால், மறுபுறம் ஏழைகளின் தங்கமாக பார்க்கப்படும் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இது சாமானியர்களின் கனவுகளை மட்டும் சிதைக்கவில்லை. இனி வாங்கவே முடியாதோ என்ற கவலையையும் எழுப்பியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 5,200 டாலராகவும், வெள்ளி விலை 88 டாலராகவும் உச்சம் தொட்டு காணப்படுகின்றன.

மொத்தத்தில் நடுத்தர வர்க்க மக்களின் விருப்பமான முதலீடாகவும், பொன்னும் பொருளாகவும் இருந்த தங்கம், வெள்ளி, இன்று எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வேகம் எனில், ஆண்டு இறுதிக்குள் இன்னும் எங்கே போய் நிற்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. ஏதோ இன்று விலை குறைந்தால் வாங்கி விடலாம் என்று நினைத்து காத்திருப்பவர்கள், தொடர்ந்து காத்திருப்பு பட்டியலிலேயே இருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. அந்த அளவுக்கு விலையானது உச்சத்திலேயே இருந்து வருகிறது. தப்பித் தவறி சற்று குறைந்தாலும் கூட, அது பெரிய அளவிலான சரிவும் இல்லை. இது ஒரு புறம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அடுத்த தலைமுறைக்காக வாங்க நினைக்கும் சாமானியர்களுக்கு கவலையாகவே மாறியுள்ளது.
உலகளாவிய அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல், பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலை, வட்டி குறைப்பு குறித்த ஊகங்கள், டிரம்பின் பிடிவாதமான வரி வாதங்கள் என பலவும் தங்கத்தின் விலையை குறைய விடாமல் பார்த்துக் கொள்கின்றன. மேற்கொண்டு இந்த நிலையே தொடரும் என்ற நிலையே காணப்படுகிறது. குறிப்பாக வரவிருக்கும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற பலத்த எதிர்பார்ப்பானது நிலவி வருகிறது. இது டாலர் மதிப்பு குறைய வழிவகுக்கலாம். இது தங்கம் விலை உயர முக்கிய காரணமாகவும் அமையலாம். ஏற்கனவே இந்த சூழலில் தான் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டுள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் ஏற்றம் கண்டு வருகிறது.
இன்று எப்படி இருக்கும் என பார்க்கையில், பெடரல் ரிசர்வ் வங்கி சில சமயங்களில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் செய்யாமல் அப்படியேவும் வைத்திருக்கிறது. கடந்த ஜனவரி மாத கூட்டத்திலேயே மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தது. அப்படி வரவிருக்கும் கூட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யாமல் இருந்தால், தங்கம் போன்ற முதலீடுகள் சற்று குறையும். இது விலையில் சற்று அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், மற்ற உலகளாவிய காரணிகள் தங்கம் விலை சரிவை தடுத்து விடலாம்.
கோடிக்கணக்கான டன் தங்கம் எங்கே? இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் எவ்வளவு? அதிர வைக்கும் உண்மைகள்?
இதனிடையே தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், தங்கம் விலையானது நீண்ட கால அடிப்படையில் வலுவாகவே உள்ளது. தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் புவிசார் அரசியல் பிரச்சனைகள், சப்ளையில் பிரச்சனை என பல முக்கிய காரணிகள் அதற்கு காரணமாக அமையலாம். ஆக நீண்ட கால அடிப்படையில் எந்த மாற்றமும் இருக்காது. அது தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்கிறது. குறுகிய காலத்தை பொறுத்த வரையில் வழக்கம்போல, முதலீட்டாளர்களையும், மக்களையும் மிரட்டி பார்க்கவே செய்யும். அதாவது அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications