ஷாஹ்தரா என்னும் ஊரைச் சேர்ந்த 61 வயதான அரசு அதிகாரி ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ. 1.2 கோடியை இழந்துள்ளார். முன்னர் லட்சங்களில் பணத்தை இழந்த மக்கள் தற்போது கோடிகளில் பணத்தை இழக்க தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட போலி ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் அதிகாரிகள் எனக் கூறி பாதிக்கப்பட்டவரிடம் மோசடிக்காரர்கள் பேசியுள்ளனர். அதிக வருமானத்தை வழங்குவதாக உறுதியளித்து அந்தப் பெண்ணை முதலீடு செய்ய வற்புறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக 78 நாட்களுக்குள் தனது சேமிப்பு மொத்தத்தையும் பாதிக்கப்பட்டவர் முதலீடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு போலியான சமூக ஊடக அக்கவுண்ட் மூலமாக இந்த மோசடி நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த ஒருவர் மூலமாக தான் இந்த மோசடி தொடங்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த நபர் தன்னை ஒரு விற்பனையாளர் போல காட்டிக் கொண்டு ஆன்லைன் அப்ளிகேஷனில் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட பெண்ணை வற்புறுத்தியுள்ளார். மோசடி செய்த நபர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக இலாபம் ஈட்டி வருவதாகவும், அதே போல பாதிக்கப்பட்ட பெண்ணும் லாபம் ஈட்டலாம் என்றும் ஆசையை தூண்டியுள்ளார்.
பின்னர் இவர்களுடைய உரையாடல் வாட்ஸ் அப்பிற்கு மாறியது. அங்கு பாதிக்கப்பட்டவருக்கு தனது பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மோசடி செய்பவரை நம்பி அந்த பெண்ணும் போலியான தளத்தில் பதிவு செய்து தனது சொந்த பணத்தை பயன்படுத்தி சேர்ந்துள்ளார்.
காலப்போக்கில் கிட்டத்தட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 56 ஆர்டர்கள் வரை அந்தப் பெண் பெற்றார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த தளத்தில் அவருக்கு ஒரு பெரிய லாபம் ஈட்டியது போல டிஸ்ப்ளேவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.
மோசடிக்காரர்களின் மிக முக்கியமான யுக்திகளில் இதுவும் ஒன்று. அதுவும் முதலீட்டு மோசடிகளில் சிக்கும்போது தங்களுக்கு முதலீட்டை விட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு, இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாக லாபம் வழங்கப்பட்டது போல காண்பிக்கப்படுகிறது. இதை நம்பி மீண்டும் மீண்டும் தங்கள் பணத்தை எல்லாம் போட்டுவிட்டு அதன் பிறகு தான் நடந்தது அனைத்தும் மோசடி என பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிய வருகிறது.
இதே யுக்தி தான் இந்த மோசடியிலும் நடந்துள்ளது. ஒரு நாள் அந்தப் பெண் தனது வருமானத்தை திரும்ப பெற முயன்றுள்ளார். அப்போது மோசடி செய்பவர்கள் சில பல காரணங்களை கூறத் தொடங்கியுள்ளனர். சில ஆர்டர்களை சரியான நேரத்தில் முடிக்க தவறியதாகவும், அப்ளிகேஷனில் அந்தப் பெண்ணின் கிரெடிட் ஸ்கோர் குறைந்ததாகவும் மோசடிக்காரர்கள் தெரிவித்தனர்.
அவரது கிரெடிட் ஸ்கோரை மீட்டெடுக்கவும், பணத்தை எடுக்கவும் மீண்டும் ரூ. 35 லட்சம் டெபாசிட் செய்ய கூறியுள்ளனர். அப்போதுதான் தான் ஒரு மோசடி வலையில் சிக்கிக் கொண்டதாக அந்த பெண் உணர்ந்துள்ளார். உடனே அந்தப் பெண்ணும் அவர்களுடைய கோரிக்கைக்கு இணங்கி பணத்தை டெபாசிட் செய்தார். ஆனால் அதன் பிறகும் பணம் எடுக்கும் செயல்முறை தாமதமானது.
பிறகு மோசடிக்காரர்கள் மீண்டும் ரூ. 34.5 லட்சத்தை டெபாசிட் செய்யும்படி கூறியுள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அந்தப் பெண்ணும் தன் PF நிதிக்கு எதிராக கடன் வாங்கி பணத்தை செலுத்தியுள்ளார். இதனால் அவருடைய அனைத்து சேமிப்பும் கரைந்து போனது. பணம் செலுத்திய போதிலும் மோசடி செய்பவர்கள் பல்வேறு சாக்குப் போக்குகளை தொடர்ந்து கூறி வந்துள்ளனர். ஆனால் பணத்தை திருப்பித் தரவில்லை. எனக்கு பணத்தை டெபாசிட் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
அதன் பிறகு யுகேவில் உள்ள ஒரு உறவினரை அணுகி அந்தப் பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போதுதான் அவர் அந்தப் பெண்ணிடம் இந்த தளம் மோசடியானது என்பதைக் கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய போதே தன்னிடம் இருந்த அனைத்து சேமிப்பையும் முதலீடு என்ற பெயரில் அந்த பெண் டெபாசிட் செய்து விட்டார். பின்னர் செய்வதறியாது விழித்த அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர்கள் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறும் எந்த ஒரு திட்டங்களிலும் முதலீடு செய்வதற்கு முன்பு சிந்தித்து செயல்படுங்கள். விழிப்புணர்வைத் தவிர இது போன்ற மோசடிகளை தடுப்பதற்கு வேறு வழியே இல்லை என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications