சிறு நகரங்களில் கூட வீட்டு வாடகை குறைந்தபட்சம் ரூ.5,000 என்ற அளவில் உள்ளது. அதே சென்னை போன்ற பெருநகரங்கள் என்றால் வீட்டின் அளவை பொறுத்து வாடகை உயரும். இந்த வாடகை கொடுக்கவே பலரும் திணறி வருகின்றனர்.
கனடாவின் தலைநகரமான டொராண்டோவில் வீட்டு வாடகை கேட்டால் பலரும் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவர். அந்த அளவுக்கு அந்த நகரத்தின் வீட்டு சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இதனால் வாடகையை சமாளிக்க அல்லது சம்பாதிக்கும் நோக்கில் அங்குள்ள தனிநபர்கள் தங்கள் படுக்கையில் பாதியை அதிக விலைக்கு வாடகைக்கு விடுவது போன்ற வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் டொராண்டோவை சேர்ந்த ரியல் எஸ்டேட் வர்த்தகரான அன்யா எட்டிங்கர் என்பவர், பேஸ்புக்கின் மார்க்கெட்பிளேஸில் ஒரு பெண், மாதம் ரூ.54,000 வாடகைக்கு தன்னுடன் படுக்கையறை பகிர்ந்து கொள்ள அறை தோழியை தேடுவதாக போஸ்ட் செய்து இருந்த விளம்பரத்தை ஷேர் செய்து இருந்தார்.
அந்த விளம்பரத்தில், டவுன்டவுன் காண்டோவில் ஏரி பார்த்த மாஸ்டர் படுக்கையறை மற்றும் ஒரு ராணி அளவிலான படுக்கையை மாதம் சுமார் ரூ.54,000 (900 கனடியன் டாலர்) வாடகைக்கு பகிர்ந்து கொள்ள தொந்தரவு இல்லாத பெண்ணை தேடுகிறேன். நான் முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை ரூம்மேட்டாக்கி கொண்டு படுக்கையறையை பகிர்ந்து கொண்டேன். அது நன்றாக இருந்தது என்று அந்த பெண் பதிவு செய்து இருந்தார்.
இது குறித்து அன்யா எட்டிங்கர் கூறுகையில், பாதி படுக்கையை வாடகைக்கு விடுவது பொருத்தமற்றது. உங்கள் படுக்கையில் ஒரு இடத்தை மாதத்திற்கு 900 கனடியன் டாலர்களுக்கு வாடகைக்கு விடுகிறீர்களா? இங்கே பலர் அதை வெறுத்ததில் ஆச்சரியமில்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோவை அன்யா எட்டிங்கர் வெளியிட்டது முதல் அது வைரலாகி 22,000 பார்வையாளர்களை கடந்துள்ளது. பாதி படுக்கையை வாடகைக்கு விடும் அந்த பெண்ணின் முயற்சியை சில பயனர்கள் சரி என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பாதி படுக்கையை வாடகைக்கு விடுங்கள் அதனால் உங்கள் தூக்க முடக்கம் பேய்க்கு இடமில்லை என்றும், இது தனிமையை குணப்படுத்துகிறது, அது நன்மைகளில் ஒன்றாகும் என்று கருத்து தெரிவித்தனர்.
அதேசமயம் பெரும்பாலான பயனர்கள் எதிர்மறையான கருத்தையே தெரிவித்துள்ளனர். இது மிகவும் அபத்தமானது. அந்த பெண் மாற்றை தேடுகிறாள், அதாவது யாரோ, எங்கே உள்ளவராக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து இடத்தை வாடகைக்கு விடுகிறார் என்பது திகைப்பூட்டும் விஷயம் என்று பதிவு செய்துள்ளனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications