இந்தியாவில் பெண்கள் மொத்த மக்கள் தொகையில் 48% இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் (GDP) அவர்களின் பங்கு 18% மட்டுமே என்று தேசியக் குடும்பக் கணக்கெடுப்பு ஆய்வு (National Family Health Survey) தெரிவிக்கிறது.
பெண்களின் வேலைவாய்ப்பில் நிலவும் பாலின வேறுபாட்டைக் குறைப்பதன் மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் பெண்களின் பங்கீட்டை 30% வரை உயர்த்த முடியும் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட் (MGI) நடத்திய மற்றொரு ஆய்வின்படி, உலகளவில் வேலைவாய்ப்பு, அதிகாரம் என அனைத்திலும் ஆண்கள் - பெண்கள் சமத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி-யில் சுமார் 28 டிரில்லியன் டாலர்கள் கூடுதலாக அதிகரிக்க முடியும் என கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்கள் - பெண்கள் சமத்துவத்தை மேம்படுத்தினால் 2025ஆம் ஆண்டுக்குள், ஆண்டு வருமானமாக 770 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இது தற்போதைய வர்த்தக வருமானத்தைக் காட்டிலும் 18% அதிகமாகும்
2023 ஆம் ஆண்டில், வேலை செய்யக்கூடிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 53% பெண்கள் உள்ளனர். உலக அளவில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் எகோசிஸ்டத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் 10% ஸ்டார்ட்-அப்களில் மட்டுமே பெண் நிறுவனர்கள் தலைமை தாங்குகின்றனர்.
பாலின சமத்துவம் மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் பல ஆய்வுகள், "Empower Her" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட காபி டேபிள் புத்தக வெளியீட்டு விழாவின் போது கவனத்தைப் பெற்றது.
உலகளவில், 65% பெண்கள் சமூக-கலாச்சார தடைகள் காரணமாக முறையான வங்கி சேவையை அணுகுவதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். இது ஆண்களுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை கூறுகிறது. மறுபுறம், உலகளவில் 72% ஆண்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்திருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மற்றொரு அறிக்கையின்படி, தொழில்துறைகளில் பணிபுரியும் 88% பெண்கள் முறைசாரா துறையில் பணியாற்றி வருகின்றனர். கூடுதலாக, சேவைத் துறையில் பணிபுரியும் பெண்களில் 7% முறைசாரா பணியாளர்களை சேர்ந்தவர்கள் என புள்ளிவிவரம் கூறுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications