மோசமான நிர்வாகம், போதிய பயிற்சி இல்லாதது, கூடுதல் சம்பள எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் 31 சதவீத பெண்கள் டெக்னாலஜி துறையில் தங்களது வேலையை 12 மாதங்களுக்குள் விட்டுவிடுகின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வேலையை விட்டுச் செல்வதன் காரணம் குறித்து கேட்டதற்கு 40 சதவீதம் பேர் தங்களது நிறுவனம் அல்லது துறையின் மோசமான நிர்வாகம் என்று குறிப்பிட்டுள்ளனர். 39 சதவீதத்தினர் தங்களுக்கு போதிய பயிற்சி தரப்படாதது, பார்க்கும் வேலையில் தங்களது கேரியர் வளர்ச்சி குறைவாக இருப்பது ஆகிய காரணங்களை தெரிவித்துள்ளனர்.

26 சதவீதம் பேர் தங்களது வேலைக்குத் தகுந்த அதிக சம்பளம் தரப்படாததால் வேலையை விட்டு விலகுவதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 85 சதவீதம் பேர் தங்கள் குழுக்களில் பாலின பாகுபாடு பார்க்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். 38 சதவீதம் பேர் நிறுவனத்தில் தங்களது வளர்ச்சிக்கான வாய்ப்பில் திருப்தி இல்லை என்று கூறி வேலையை விட்டு விலகுவதாகக் கூறியுள்ளனர்.
இது போன்ற காரணங்களால் டெக்னாலஜி துறையில் ஏற்கனவே நிலவும் பாலின இடைவெளியை இன்னும் அதிகமாக விரிவுபடுத்தும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார்.
2023 செப்டம்பர் முதல் 2024 ஜனவரி வரை ஸ்கில்சாப்ட் விமன் இன் டெக் சர்வே நிறுவனம் டெக் துறையில் டெக்னிக்கல் வேலை பார்க்கும் 500 பெண்களிடம் விரிவான ஒரு ஆய்வை நடத்தியது. இதில் பெண்கள் தங்களது வேலையில் தொடர்வதற்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படாததும், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் போன்ற அட்வான்ஸிங் டெக்னலாஜிகல் திறன்களை கற்றுத் தராததும் முக்கியக் காரணமாகத் திகழ்வது தெரிய வந்துள்ளது.
பயிற்சியைப் பொறுத்தவரை, டெக்னாலஜி துறையில் உள்ள பெண்கள் ஹேண்ட்ஸ்-ஆன் எனப்படும் குறிப்பிட்ட பயிற்சிகளையும் (43%) மற்றும் டெலிவரி ஃபார்மட் ஃபிளக்ஸிபிலிட்டி (40%), இன்ஸ்ட்ரக்டர் தலைமையிலான பயிற்சி ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.
டெக் தொடர்பாக எந்த பிரிவில் அதிக ஆர்வம் காட்டப்படுகிறது என்று ஆய்ந்ததில் பெரும்பாலானவர்கள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸை(41%) சுட்டிக்காட்டினர்.
இருப்பினும், ஐந்தில் மூன்று பேர் தாங்கள் இன்னும் வேலையில் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸைப் பயன்படுத்தவில்லை என்றும், 63% பேர் டெக்னாலஜியை தங்கள் வேலையில் ஒருங்கிணைக்க போதுமான பயிற்சியைப் பெறவில்லை என்று குறைபட்டுள்ளனர்.
ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸில் பெண்களின் ஈடுபாடு, அதிகாரமளித்தல் போன்ற சமாசாரங்களில் டெக்னாலஜியை சமமான வழிகளில் டிசைன் செய்து செயல்படுத்துவதை தங்களது நிறுவனம் உறுதிசெய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
முன்னெப்போதையும் விட பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், நிறுவனத் தலைவர்கள் அவர்களுக்கு இன்னும் அதிக ஆதரவை வழங்க வேண்டும். இதனால் அந்தப் பெண்கள் வணிகத்தை முன்னேற்றவும், வழிநடத்தவும், முன்னோக்கி தள்ளவும் முடியும்.
இந்தச் செயல்பாடு அவர்களது பன்முகத்தன்மை புதுமைகளை வளர்க்கிறது. எனவே ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸில் பெண்களின் திறன்களை மேம்படுத்துவது வணிக சிக்கல்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் சமமான தீர்வுகளை உருவாக்க வழிவகுக்கும் என்று ஒரு நிபுணர் கூறினார்.
ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தவிர, டெக்னாலஜி துறையில் உள்ள பெண்கள் தலைமைத்துவம், மேலாண்மை (37%) மற்றும் திட்ட மேலாண்மை (23%) ஆகியவற்றில் திறன்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
வளர்ச்சி திறனை அதிகரிப்பதில் நிர்வாக ஆதரவு வேண்டுமென்று 29 சதவீதத்தினரும், தற்போதைய ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று 28 சதவீதத்தினரும் , பன்முகத்தன்மையைப் பெருக்க வேண்டும், சமபங்கு மற்றும் கன்டன்ட் ஆகியவற்றில் திருப்தி அளிக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று 25 சதவீதத்தினரும் வலியுறுத்துகின்றனர்.
டெக் துறையில் 27% பெண்கள் மட்டுமே தங்கள் வேலையில் மிகவும் திருப்தி அடைவதாகக் கூறியுள்ளனர். டெக்னாலஜி துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கான தங்களுக்கு கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடு செய்தல், வழிகாட்டிகளை அளித்தல், ஆற்றல் திறன்களை வளர்த்தல் போன்ற காரியங்களை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
36% பேர் தங்களது கூடுதல் திறனுக்கான சான்றிதழ்களைப் படித்துப் பெறுவதன் மூலம் டெக்னாலஜி துறையில் தங்களது திறன்களை மேம்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
டெக்னாலஜி துறையில் உள்ள பெண்களில் பாதி பேர் தங்களுக்கு சான்றிதழ்கள் கிடைத்தால் அதிக நம்பிக்கை ஏற்படும் என்றும் இதன்மூலம், மூன்றில் ஒரு பகுதியினர் சக ஊழியர்களிடையே அதிக நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் பெறுவதாக உணர்கிறார்கள்.
Story written by: I.jayachandran


Click it and Unblock the Notifications