கார்ப்பரேட் கம்பெனிகளில் 26% பெண்கள்! சபாஷ் நல்ல வளர்ச்சி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பெண்கள் அதிகம் முன்னேற வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலை வாய்ப்புகளில் மிளிற வேண்டும் என்கிற எண்ணம் இன்று பலருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது.

அந்த எண்ணத்தின் வெளிப்பாடாக பெண்கள், வெறும் கல்லூரிப் படிப்பைத் தாண்டி, நிறைய படிக்கிறார்கள். ஆண்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலைகளைக் கூட பெண்கள் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவ்வலவு ஏன் இந்திய ராணுவத்தில் கமாண்டோ படை வீரர்கள், போர் விமானிகள் என அதிகம் உடல் வலிமை தேவையாக இருக்கும் எல்லா வேலைகளிலும் பெண்கள் வரத் தொடங்கிவிட்டார்கள்.

கார்ப்பரேட்

கார்ப்பரேட்

இந்த காலத்தில், இந்தியாவின் கார்ப்பரேட் கம்பெனிகளில் பெண்களின் நிலை என்ன..? எவ்வளவு பெண்கள் வேலை பார்க்கிறார்கள் என அவ்தார் என்கிற மனித வள நிறுவனம் ஒரு ஆராய்ச்சி செய்து இருக்கிறது. இவர்கள் 10 லட்சம் பெண்கள் வேலை பார்க்கும், 7 துறை சார்ந்த 353 கார்ப்பரேட் கம்பெனிகளில் இந்த ஆராய்ச்சியை நடத்தி இருக்கிறார்களாம்.

துறைகள்

துறைகள்

கன்சல்டிங், எஃப் எம் சி ஜி, ஐடி, ஐடி சார்ந்த சேவைகள், உற்பத்தி, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் பார்மா என்கிற ஏழு துறைகளில் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். இந்த துறைகளிலேயே பெண்கள் அதிகம் இடம் பிடித்து இருக்கும் துறை என்றால் அது கன்சல்டிங் தானாம். கன்சல்டிங் துறையில், 2020-ம் ஆண்டு முடிவில் கன்சல்டிங் துறையில் சுமார் 44% பேர் பெண்களாக இருப்பார்களாம்.

எஃப் எம் சி ஜி

எஃப் எம் சி ஜி

காலையில் எழுந்த உடன் பல்லை விளக்க பயன்படுத்தும் பேஸ்ட் தொடங்கி, ராத்திரி தூங்கும் போது கொளுத்தி வைக்கும் கொசு வத்தி வரை எல்லாவற்றையும் இந்த Fast-moving consumer goods (FMCG) துறைக்குள் கொண்டு வரலாம். கன்சல்டிங்கைத் தொடர்ந்து இந்த எஃப் எம் சி ஜி துறையில் தான் பெண்கள் அதிகம் வேலை பார்க்கிறார்களாம். இந்த துறையில் 20% பெண்கள் பங்களிக்கிறார்கள்.

குறைவு தான்

குறைவு தான்

கன்சல்டிங் துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் இன்னும் உற்பத்தித் துறையில் பெண்கள் பெரிய அளவில் வரவில்லை என்கிறார்கள். கடந்த 2019-ல் உற்பத்தி துறையில் வெறும் 8 சதவிகிதம் தான் பெண்கள் பங்கெடுத்து இருக்கிறார்களாம். இந்த ஆண்டு மீண்டும் உற்பத்தி துறையில் பெண்கள் பங்களிப்பு 10 சதவிகிதமாவது தொடலாம் என்கிறார்கள்.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

மேலே சொன்ன துறைகளில் கன்சல்டிங், எஃப் எம் சி ஜி, ஐடி, ஐடி சார்ந்த சேவைகள் ஆகிய துறைகளில் பெண்கள் பங்கெடுப்பது அதிகரிக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். பார்மா மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகளில் பெண்கள் பங்களிப்பு கொஞ்சம் குறையலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் பெண்கள் நிறைய முன்னேறட்டும். இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

women participating 26 percent in India inc

Women are participating 26 percent in India inc corporate companies. The report is based on data from across 353 companies that employ more than 10 lakh women.
Story first published: Sunday, March 8, 2020, 13:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X