அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என இருந்த நிலை மாறி இன்று அனைவரும் படித்து ராணுவம், விமானம், கடற்படை, மருத்துவம், பொறியியல், அரசியல் ஆகிய பிரிவுகளில் தொடங்கி பெண்கள் இல்லாத பிரிவே இல்லை எனும் அளவுக்கு பெண்கள் இன்று முன்னேறி வருகிறார்கள். இருப்பினும், பெண்களுக்கு எதிரான பாகுபாடு, குற்றங்கள் , அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படி, தங்களுக்கான உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி பல நாடுகளில் சக்திவாய்ந்த போராட்டங்களை வழிநடத்தி வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி ஆண்களுக்கு சவால் விடும் வகையில் நடத்தப்பட்ட பெண்களின் போராட்டங்களைப் பற்றிய ஒரு தொகுப்பு இது.
உடலுறுதி கொண்ட ஆண்களை விட மனவலிமை படைத்த பெண்களுக்கே பலம் என்பது அவர்களுக்கே உரித்தான சிறப்பு. பெண்களே பெண்களுக்காகப் போராடிப்பெற்ற சுதந்திரம் இது. பெண்களுக்கான சுதந்திரம் , சமத்துவம், பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்ணியம் என்பது பெண் உரிமைகளுக்கான குரல் மட்டுமல்ல, அதுவே ஒரு சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டக்கூடிய மிக முக்கியமான விஷயமாகும்.

இந்த போராட்டத்தில் ஆண்களின் பங்கு முக்கியமானது. பெண்ணியத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது முதன்மையான படிநிலையாகும். பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் நிலை ஆகியவற்றை புரிந்துகொள்வது ஆண்களுக்கு இன்றியமையாததாகிறது. பெண்கள் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண் கல்வி என பேசிய நிலையை கடந்து சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு பெண்கள் வீதியில் இறங்கி குரல் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என்றும் நமது வாழ்க்கையில் ஒரு முழு உருவாக்கத்தை தருபவர்கள் பெண்கள்.எனவே, பெண்களுக்கான உரிமையை பெற்ற வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டியது அவசியம். அப்படி, இந்த சில நாடுகளில் தங்களின் உரிமைக்காக வீதியில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
1789-இல் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட புரட்சியின்போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தி ஒன்றாக சேர்ந்து தங்களுக்கான உரிமையை கேட்டுப் போராடினர். இதில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை, நிரந்தர ஊதியம் மற்றும் பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடினர்.
வெறும் எதிர்ப்பாக கிளம்பிய இந்த போராட்டம் நாளடைவில் பெண்கள் குழுக்களாக ஒன்று திரண்டு கிளர்ச்சியை ஏற்படுத்தினர். பெண்கள்தானே என்று மெத்தனப்போக்கு காட்டிய பிரான்ஸ் மன்னன் 14ஆம் லூயிக்கு பேரிடியாக விழுந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் பெண்கள் அனைவரும் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி தங்களது உரிமைகளை நிலை நாட்டினர். இந்த செய்தி ஐரோப்பிய நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனைத்தொடர்ந்து அந்தந்த நாடுகளில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்டு போராட ஆரம்பித்தனர். பின்னாளில் உலக நாடுகளின் சார்பில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர்தின நாளாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பெண்கள் பேரணி: 2020 ஆம் ஆண்டில், சர்வதேச மகளிர் தினத்தைக் குறிக்கும் வகையில் பாகிஸ்தானின் நகர்ப்புற நகரங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியின் தலைப்பு "Mera Jism, Meri Marzi" (My body, my choice). "மேரா ஜிசம், மேரி மர்சி" (என் உடல், என் விருப்பம்) ஆகும். பெண்கள் தங்கள் சொந்த உடல்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமை, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல், கட்டாய மத மாற்றங்கள் மற்றும் ஊடகங்களில் பெண்களைப் பாலியல் ரீதியாக சித்தரிப்பது போன்றவற்றை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடத்தப்பட்டது.
1913 வாஷிங்டன் பெண்கள் வாக்குரிமை பேரணி: 1900-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல வாக்குரிமை பேரணிகள் நடைபெற்றன, அவை வாக்குரிமை இயக்கத்தின் முதல் பெரிய ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. இந்த குறிப்பிட்ட பேரணி, வாட்ஷிங்டன் டி.சி-யில் நடந்தது, அரசியலமைப்பில் திருத்தம் கோரி நடத்தப்பட்ட அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இது சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்டது.
1975 ஐஸ்லாந்து பெண்கள் போராட்டம்: 1975 ஆம் ஆண்டில், பெண்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டது மற்றும் அரசாங்கத்தில் குறைவான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அதனால்தான் அவர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்து அதை "பெண்கள் தின விடுமுறை" என்று அழைக்கப்பட்டது. போராட்டத்திற்காக அக்டோபர் 24 அன்று, ரெய்காவிக் தெருக்களில் 25,000 பெண்கள் கூடினர், மேலும் 90% பெண்கள் வேலைக்குச் செல்லவில்லை.
2016 போலந்தில் கருக்கலைப்பு தடை எதிர்ப்பு: போலந்தில் கருக்கலைப்பு அணுகலை அரசியல்வாதிகள் கட்டுப்படுத்த முயன்றபோது, பெண்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள், கருப்பு நிற உடையணிந்து, தங்கள் வேலைகளைப் புறக்கணித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். வார்சாவின் கோட்டை சதுக்கத்தில் சுமார் 30,000 பேர் கூடி, கோஷமிட்டனர்.
தாலிபான்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தான் பெண்கள் போராட்டம்: ஆகஸ்ட் 2021 இல் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிய பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் கல்வியைத் தடை செய்தல், பல்கலைக்கழகங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்கள் செல்வதைத் தடை செய்தல், கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ளனர். இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஆப்கானிய பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கோரி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இவை அவ்வப்போது பெண்கள் தங்களின் சக்தி மற்றும் துணிவை வெளிப்படுத்தி, தங்களுக்கான அச்சுறுத்தல்களுக்கெதிராக போராடிய சில உதாரணங்களாகும். இவை தவிர, சமீபத்தில் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நீதி கேட்டு பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதும் பெரிய அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடுக்குமுறைகளுக்கும், தங்களது உரிமைக்காகவும் பல இடங்களில் இன்றுவரை பெண்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications