கேரளா: கொரோனா காலத்தில் வொர்க் ப்ரம் ஹோம் (work from home) என்ற நடைமுறை எப்படி பிரபலமடைந்ததோ அந்த முறையில் கேரளா அரசு வொர்க் நியர் ஹோம் (work near home) என்ற ஒரு புதிய நடைமுறையை கொண்டு வர இருக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக வேலைகளை விட்ட பெண்கள் மீண்டும் வேலைகளில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு திட்டத்தை கேரள மாநில அரசு முன்னெடுத்துள்ளது.
இதன்படி ஒர்க் நியர் ஹோம் பூங்காக்கள் கேரளாவின் கொட்டாரக்கரா மற்றும் பெரிந்தல்மன்னா பகுதிகளில் அமைக்கப்படுகின்றன.

அதாவது குடியிருப்புகளுக்கு அருகிலேயே ஐடி நிறுவனங்கள் செயல்படக்கூடிய வகையில் இந்த நிறுவனங்கள் அமைகின்றன. இந்த பூங்காக்கள் அரசு நடத்தும் ஐடி பூங்காக்களின் நிர்வாகத்தின் கீழ் வரும். சுமார் 5000 முதல் 50,000 சதுர அடி பரப்பளவிலான பகுதிகளில் இந்த அலுவலகங்கள் நிறுவப்பட உள்ளன. இங்கே ஓய்வெடுப்பதற்கான இடங்கள், உணவருந்தும் இடங்கள், வீடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கேரள அரசு தெரிவிக்கிறது.
கேரள அரசின் டெவலப்மெண்ட் அண்ட் இன்னோவேசன் ஸ்ட்ராட்டஜிக் கவுன்சில் (K- DISC), கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடம் இருந்து நிதி உதவியை பெற்று இந்த வொர்க் நியர் ஹோம் பூங்காக்களை அமைக்க உள்ளன. இந்த திட்ட பணிகளை கேரள மாநில அரசின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனம் மேற்பார்வை இட உள்ளது. கேரள உள் கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் இந்த பூங்காக்களில் நிறுவனங்களை அமைப்பதற்காக 80 சதவீத தொகையை வழங்கும் என சொல்லப்படுகிறது.
அங்கே அலுவலகத்தை அமைக்கும் நிறுவனங்கள் 20 சதவீத தொகையை செலுத்தினால் போதும். இந்த நிறுவனங்கள் மீதமுள்ள 80 சதவீத தொகையை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு கேரள மாநில அரசுக்கு திரும்ப செலுத்தினால் போதும். இதற்காக கூடிய விரைவில் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் கோரப்பட உள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரள அரசின் நாலேஜ் எக்கனாமி மிஷன்(knowledge economy mission) பிரிவின் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய ஸ்ரீகலா வொர்க் நியர் ஹோம் என்ற முயற்சி, பல்வேறு காரணங்களுக்காக தங்களுடைய வேலையை விடுத்து வீட்டிலேயே தங்க வேண்டிய சூழலுக்கு ஆளான பெண்கள் மீண்டும் தங்களுடைய வேலையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.
குறிப்பாக பெரிய நகரங்களில் சென்று ஐடி நிறுவனங்களில் பணிபுரிய முடியாத பெண்களுக்கு இந்த முன்முயற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளார். கேரளாவில் சுமார் 5 லட்சம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக வேலையை விட்டு வீட்டிலேயே தங்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 96% பேர் மீண்டும் வேலைக்கு செல்ல விரும்புவதாக அண்மையில் வெளியான ஒரு சர்வே தெரிவிக்கிறது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications