டெல்லி: மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதை மட்டும் செய்து விடாதீர்கள் என உலக தங்க கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் சனிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை தான். இந்நிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என உலக தங்க கவுன்சில் கூறுகிறது.

உலக தங்க கவுன்சிலின் இந்தியாவுக்கான தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய சச்சின் ஜெயின் மத்திய அரசு 2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்த கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
ஒருவேளை மத்திய அரசு தங்கத்தின் மீதான வரியை உயர்த்தினால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக தங்கத் கடத்தலுக்கு வித்திடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது தவிர உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தார். இதனால் உள்நாட்டில் தங்கத்தின் விலை சற்றே குறைந்தது. ஆனால் சர்வதேச காரணிகள் காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக அதிகரித்து விட்டது. இருந்தாலும் இறக்குமதி வரி குறைந்ததன் காரணமாக இந்தியாவில் தங்கம் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடைந்து வந்தன என கூறும் சச்சின் ஜெயின் மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய ஜிடிபி -யில் தங்கம் சார்ந்த துறை 1.3% பங்களிப்பை தருகிறது. நாட்டில் சுமார் 20 முதல் 30 லட்சம் பேர் தங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை மாதம் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதுதான் இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்தார்.
இதனால் நாட்டில் முறைகேடாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டது என்றும் உள்நாட்டில் மக்கள் தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்தது என்றும் உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
இருந்தாலும் மத்திய அரசு என்ன நோக்கத்திற்காக தங்கத்தின் விலையை குறைத்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை எனவே அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அவ்வாறு அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தினால் உள்நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications