டெல்லி: இந்தியா தனது தங்க இருப்புகளை விற்பனை செய்ததாக பல செய்திகள் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, நிலவி வரும் மந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியானது அரசின் கவலையை மேலும் அதிகரித்தது என்றே கூறலாம்.
ஏனெனில் ஓர் நாட்டில் பொருளாதாரம் சரியும் போது அதை ஈடுக்கட்ட தங்கமாக வாங்கி வைப்பார்கள்.
ஆனால் இங்கு இருக்கும் தங்கத்தையே விற்கிறார்கள் என்ற கருத்து சற்று கவலையை உண்டாக்கியது. எனினும் அது உண்மையில்லை என்றும் கூறும் விதமாக, உலக தங்க கவுன்சில் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு 10வது இடம்
இந்தியாவின் தங்கம் இருப்பை பொறுத்து உலகில் 10 வது நாடாக உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் அறிக்கையின் படி, இந்தியாவின் தங்கம் இருப்பானது 618.2 டன் மஞ்சள் உலோகம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவானதே என்றாலும், இந்தியா நிலையாக இதே அளவு தங்கத்தை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் இருப்பில் அமெரிக்கா முதல் இடம்
இது மத்த நாடுகளின் மொத்த இருப்புகளுடன் ஒப்பிடும்போது தங்கம் வைத்திருக்கும் பங்கின் அளவு 6.9 சதவிகிதமாகும். இதே இந்த பட்டியலில் அமெரிக்கா 8,133.5 டன் தங்க இருப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல் ஜெர்மனி 3366 டன் தங்க இருப்புடன் உள்ளது. இதே மூன்றாவது இடத்தில் சர்வதேச நாணய நிதியம் 2,814 டன் தங்கம் இருப்புடன் உள்ளது.
இந்தியாவை விட அதிக தங்கம்
இதே இந்தியாவைவிட அதிகம் தங்கம் இருப்பு வைத்திருக்கும் பட்டியலில் இத்தாலி 2,415.8 டன்னாக உள்ளது. இதே பிரான்ஸ் 2436 சன் தங்கம் இருப்புடனும், இதே ரஷ்யன் ஃபெடரேஷன் 2,241.9 டன் தங்கம் இருப்புடனும், இதே சீனா 1948.3 டன்களுடனும், சுவிட்சர்லாந்து 1,040 டன் தங்கம் இருப்புடனும், ஜப்பான் 765.2 டன் தங்கம் இருப்புடனும் உள்ளது.
தங்கத்தை விற்கவில்லை
கடந்த வாரம் ஊடக அறிக்கைகள் இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி ஜூலை முதல் தங்கத்தில் தீவிரமாக வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் வங்கி 5.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை வாங்கியபோது, 1.15 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றுள்ளது என்றும் பல கருத்துகள் வெளியாகின.
தங்கம் விற்பனை செய்யவில்லை
இந்த நிலையில் மத்திய வங்கியின் தங்க விற்பனை பற்றிய செய்திகள் கடந்த அக்டோபர் 27ம் தேதியன்று வெளியானதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு ட்விட்டரில் தங்கம் விற்பனை செய்திகளை மறுத்ததோடு, ரிசர்வ் வங்கி எந்த தங்கத்தையும் விற்பனை செய்யவில்லை. எந்த வர்த்தகமும் செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
இந்தியாவில் குறைவு தான்
உலகிலேயே மிகப்பெரிய அளவிலான பொருளாதார நாடுகள் தங்கம் இருப்பை அதிகம் வைத்திருப்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது. இதில் அமெரிக்கா 76.9 சதவிகிதமும், இதே ஜெர்மனி 73 சதவிகித இருப்பும், இத்தாலில் 68.4 சதவிகிதமும், இதே பிரான்ஸ் 62.9 சதவிகித இருப்புடனும், இதனுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மொத்த வெளிநாட்டு இருப்புகளாக 6.9 சதவிகிதம் தங்கம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மொத்த இருப்பு
இதே உலக அளவில் 34,490.44 டன் தங்கம் இருப்பு உள்ளதாகவும், இதில் 10,776.1 டன் தங்கம் யூரோ பகுதியிலும், 11,437.1 டன் மத்திய வங்கியிலும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தங்கம் இருப்பு குறைவு தான். இந்த நிலையில் நிலவி வரும் பொருளாதார மந்தம் இவற்றை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தங்கம் இருப்பையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications