உலகின் நம்பர் 1 மெகா கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கு இப்போது நேரம் சரியில்லை என்று தெரிகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் மிகவும் நெருக்கமாக இருப்பது, முதலுக்கே மோசமான கதையாக எலான் மஸ்க்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவை குறைக்க ஐடியா கொடுக்கிறேன் என்று ஆயிரக்கணக்கான பேர் வேலை இழக்க எலான் மஸ்க் ஒரு காரணமாகி விட்டார்.
இது எலான் மஸ்க் மீது அமெரிக்கர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டும் நிற்கவில்லை அவரது பிசினஸையும் பாதிக்க தொடங்கியுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் வாகன விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது. தொழிற்சாலையில் மேம்படுத்துதல் காரணமாக உற்பத்தி குறைந்ததால் விற்பனை குறைந்தது என்றாலும், நுகர்வோர் புறக்கணிப்பும் ஒரு காரணம் கூறப்படுகிறது. இதனால் எலான் மஸ்க் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டால் அவரது பிராண்டும் கடுமையாக பாதிக்கப்படும் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரபல தொழில்நுட்ப ஆய்வாளரும், டெஸ்லாவின் வளர்ச்சி திறனில் நீண்டகாலமாக நம்பிக்கை கொண்டவருமான வெட்பஷ்ஸின் டான் ஐவ்ஸ் கூறுகையில், பலவீனமான கார் விற்பனை, மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தில் மஸ்க்கின் தொடர்ச்சியான நிர்வாகத்தை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்க அரசாங்கத்தில் ஆயிரக்கணக்கான பணி நீக்கங்களை உருவாக்க எலான் மஸ்க் உதவியதால், நுகர்வோர் புறக்கணிப்பு மற்றும் நாசவேலைக்கு டெஸ்லா நிறுவனம் இலக்காகி உள்ளது. இது பாதையில் திருப்பு முனை, அவர் (எலான் மஸ்க்) எவ்வளவு அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ, அதற்கு மேல் பிராண்ட் பாதிக்கப்படுகிறது. இந்த காலாண்டு டெஸ்லாவிற்கு மஸ்க் ஏற்படுத்தும் சேதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 10,000 கோடி டாலர் கிளப்பில் இடம்பெற்றுள்ள உலகின் மெகா கோடீஸ்வரர்களில் பலரின் சொத்து மதிப்பு கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக எலான் மஸ்க் தனது சொத்து மதிப்பில் 11,600 கோடி டாலரை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் இன்டெக்ஸின்படி, எலான் மஸ்கின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 31,600 கோடி டாலராக குறைந்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் பில்லியன் கிளப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களில், என்டிவியாவின் ஜென்சன் ஹூவாங் (1,920 கோடி டாலர்) மற்றும் டெல் டெக்னாலஜிஸின் மைக்கேல் டெல் (2,450 கோடி டாலர்) ஆகியோரின் சொத்து மதிப்பு கடுமையாக சரிந்தததால் இந்த எலைட் குரூப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேசமயம் இந்த ஆண்டில் தங்கள் செல்வத்தை அதிகரித்த இரண்டே சென்டி பில்லியனர்கள், வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ் மட்டுமே. பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 200 கோடி டாலர் அதிகரித்துள்ளது. வாரன பஃபெட் கடந்த காலாண்டில் மட்டும் 2,430 கோடி டாலர் சம்பாதித்துள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications