வெறும் ரூ.1200 கடனில் உருவான உலகின் மாபெரும் தங்கம் ஏற்றுமதி நிறுவனம்..!

இந்தியாவில் இருந்து ஒரு இளைஞன் வெறும் 1200 ரூபாய் கடனில் உலகின் மாபெரும் தங்கம் ஏற்றுமதி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? உண்மை 100க்கு 100 உண்மை. இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ராஜேஷ் ஒரு முக்கிய உதாரணம்.

1964 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்த ராஜேஷ் மேத்தா, பெங்களூரில் புகழ்பெற்ற St Joseph's பள்ளியில் படித்தார். சிறு வயது முதல் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இந்த ராஜேஷ் பின்னாளில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து நகைகடை வைத்த தனது தந்தையின் வர்த்தகத்தில் சேர்ந்தார்.

வெறும் ரூ.1200 கடனில் உருவான உலகின் மாபெரும் தங்கம் ஏற்றுமதி நிறுவனம்..!

ராஜேஷ் மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் சந்தையில் நகை கடை வர்த்தகத்தை மேம்படுத்த அதிரடியான முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் ராஜேஷ்-ன் பங்கு முக்கியமானதாக இருந்தாலும் துவக்கத்தில் 3 பேரின் கூட்டு முயற்சியின் வாயிலாக வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் ராஜேஷ் வங்கியில் பணியாற்றி வந்த தனது சகோதரர் பிபின் வாயிலாக 1200 ரூபாய் கடன் பெற்று ராஜேஷ் தனியாக வெள்ளி வியாபாரம் துவங்கினார். பெங்களூரில் ராஜேஷ் டைமெண்ட் கம்பெனி என்ற பெயருடன் வர்த்தகத்தை துவங்கிய ராஜேஷ் முதல் சென்னையில் இருந்து வெள்ளி மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி ராஜ்கோட்-ல் விற்பனை செய்தார்.

பின்னாளில் குஜராத்தில் இருக்கும் மொத்த வியாபாரிகளிக்கு வெள்ளி பொருட்களை அதிகளவில் விற்க துவங்கினார் ராஜேஷ். இந்த வெற்றியை தொடர்ந்து ராஜேஷ் தனது வர்த்தகத்தை பெங்களூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய 3 பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்தார்.

வெள்ளி வியாபாரத்தில் பெரிய அளவிலான லாபத்தை பார்த்த ராஜேஷ் தங்க நகை விற்பனையில் இறங்க முடிவு செய்து பெங்களூரில் 1989ல் சிறிய அறையில் தங்க நகை செய்யும் தொழிலை துவங்கினார். ராஜேஷ் தனக்கு இருக்கும் கான்டெக்ட்-ஐ பயன்படுத்தி அப்போதே பிரிட்டன், துபாய், ஓமன், குவைத், அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்தார்.

இதன் மூலம் 1992ல் வருடம் 2 கோடி ரூபாய் வரையில் ராஜேஷ் சம்பாதித்தார், 1998ல் 1200 கோடி ரூபாய் வரையில் வருமானத்தை பார்த்தார் ராஜேஷ். இதோடு நிற்காமல் Shubh Jewellers என்ற பெயரில் பெங்களூர் மற்றும் கர்நாடகா-வில் பெரும்பாலான பகுதிகளில் நகை கடைகளை திறந்தார் ராஜேஷ்.

வெறும் ரூ.1200 கடனில் உருவான உலகின் மாபெரும் தங்கம் ஏற்றுமதி நிறுவனம்..!

இதற்கு மத்தியில் பல்வேறு தடுமாற்றங்கள் உடன் வேகமாகவும் வளர்ந்த ராஜேஷ், ஜூலை 2015ல் சுவிஸ் நாட்டின் Valcambi என்னும் சுத்திகரிப்பு நிறுவனத்தை வாங்கினார், Valcambi இந்தியா மற்றும் சுவிஸ் நாட்டின் Balerna என்னும் பகுதியில் சுத்திகரிப்பு ஆலையை வைத்துள்ளது.

இந்த Valcambi உலகில் அதிக விலை மதிப்பு கொண்ட தங்கம், வெள்ளி, பிளாடினம், பல்லாடியம் போன்ற உலோகத்தை சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. Valcambi நிறுவனம் 2021ல் மட்டும் 2.58 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியது.

Valcambi நிறுவனம் தற்போது European Gold Refineries நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதை Global Gold Refineries AG என்றும் நிறுவனம் மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

வெறும் ரூ.1200 கடனில் உருவான உலகின் மாபெரும் தங்கம் ஏற்றுமதி நிறுவனம்..!

Global Gold Refineries AG நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளை REL Singapore மற்றும் 5 சதவீத பங்குகளை Rajesh Exports Limited India வைத்துள்ளது. இதன் மூலம் Valcambi நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் ராஜேஷ் மேத்தா கட்டுப்பாட்டில் உள்ளது கிளை நிறுவனமாக இயங்கி வருகிறது.

இந்தியாவில் தங்க மற்றும் வெள்ளி வர்த்தகம், சுவிஸ் நாட்டில் தங்க சுத்திகரிப்பு தொழிற்சாலை மூலம் தங்க பார்களை உருவாக்கி தற்போது உலகில் 60 நாடுகளுக்கு ராஜேஷ் மேத்தாவின் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் Valcambi ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியம் உருவாக அடிப்படை அந்த 1200 ரூபாய் கடன் என்றால் மிகையில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+