தங்கம் என்றாலே நம் நினைவிற்குப் பெண்கள் வருவதெல்லாம் அந்தக் காலம். இன்று தங்கம் என்றால் பாதுகாப்பான முதலீடு, உறுதியாக லாபம் தரக்கூடிய ஒரு முதலீட்டுப் பிரிவு என்ற அளவில் எண்ணம் மாறியுள்ளது. ஆண்களும் சரி, பெண்களும் சரி இன்று தங்கத்தின் மீது ஒரு பகுதி வருமானத்தை முதலீடு செய்யத் தயாராகி வருகின்றனர். இது சாமானிய மக்களுக்கு மட்டும் அல்லாமல் வல்லரசு நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரையில் பொருந்தும்.
பொருளாதாரம், வர்த்தகச் சந்தை மோசமடையும் நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் நம் வீட்டை மட்டுமல்ல ஒரு நாட்டையே காப்பாற்றும் என்பதை உணர்ந்து தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கிக் குவித்து வைத்துள்ளது.
பங்குச்சந்தை முதலீடு, கிரிப்டோகரன்சி, டெக்னாலஜி எனப் புதிய புதிய விஷயத்தில் மிகவும் முனைப்புடன் செயல்படும் அமெரிக்க அரசு எவ்வளவு தங்கம் வாங்கி வைத்துள்ளது தெரியுமா..? கேட்டா ஆடிப்போயிருவீங்க..!
பாதுகாப்பு
சர்வதேச சந்தைகளின் நிலையற்ற தன்மை, பொருளாதார வீழ்ச்சி, கொரோனா போன்ற தொற்று ஏற்படும் காலத்தில் பங்குச்சந்தை மற்றும் முதலீட்டுச் சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும், அந்த நேரத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாணய மதிப்பை நிலைநிறுத்தவும், நிலையான வர்த்தகச் சந்தையைக் கொண்டு வரவும் சரியமான முதலீடு எப்போதும் தங்கம் தான்.
இந்தியா
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கூட, தனது தங்க இருப்பை மொத்த இருப்பு அளவீட்டில் 10 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்தியாவும் பொருளாதார நிலையற்ற தன்மையைச் சரி செய்யவே தங்கத்தை அதிகளவில் இருப்பு வைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இதேபோல் இந்தியா இனி வரும் காலத்தில் அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்வதைக் காட்டிலும் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர் பரிந்துரை செய்தார்.
தங்க இருப்பு
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலகத் தங்க கவுன்சில் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்துள்ள டாப் 20 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தையும் இந்தியா 9வது இடத்தையும் பிடித்துள்ளது.
டாப் 20 நாடுகள்
தங்கம் இருப்பு வைத்துள்ள டாப் 20 உலக நாடுகளின் பட்டியல்
- அமெரிக்கா - 8133.5 டன்
- ஜெர்மனி - 3,363.6 டன்
- இத்தாலி - 2,451.8 டன்
- பிரான்ஸ் - 2,436 டன்
- ரஷ்யா - 2,299.9 டன்
- சீனா - 1948.3 டன்
- ஸ்விஸ் - 1,040 டன்
- ஜப்பான் - 765.2 டன்
- இந்தியா - 657.7 டன்
- நெதர்லாந்து - 612.5 டன்
- துருக்கி - 583 டன்
- தைவான் - 422.7 டன்
- போர்ச்சுகல் - 382.5 டன்
- கஜகஸ்தான் - 378.5 டன்
- உஸ்பெகிஸ்தான் - 342.8 டன்
- சவுதி அரேபியா - 323.1 டன்
- பிரிட்டன் - 310.3 டன்
- லெபனான் - 286.8 டன்
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications