யமஹா மோட்டார் இந்தியாநிறுவனம் நாட்டின் முன்னணி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வருகிறது. ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் யமஹா மோட்டார் இந்தியா. இந்திய இளைஞர்கள் மத்தியில் யமஹாவின் பைக்களுக்கு எப்போதும் பெரிய வரவேற்பு காணப்படுகிறது. யமஹா மோட்டார் சைக்கிளின் ஸ்டைலான வடிவமைப்புகாகவே அதனை இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் அந்நிறுவனமும் இளைஞர்களை குறிவைத்து தனது தயாரிப்புகளை உருவாக்குகிறது.
அந்த வகையில் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான எஃப்இசட் பிராண்டில் புதிய FZ-S-Fi ஹைபிரிட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2025 FZ-S-Fi ஹைபிரிட் பைக்கை ரூ.1,44,800 விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) வெளியிட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் மற்றும் ஸ்டாப் அண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் (எஸ்எஸ்எஸ்) ஆகியவற்றை கொண்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. எஸ்எஸ்எஸ் அம்சம் பைக் செயலற்ற நிலையில் இருக்கும்போது எஞ்சினை தானாகவே அனைத்து விடும், கிளட்சை செயலுடன் மீண்டும் பைக் ஸ்டார்ட் ஆகும். இதனால் எரிபொருளை சேமிக்க முடியும்.

இந்த பைக் கண்ணை கவரும் ரேசிங் ப்ளூ மற்றும் சியான் மெட்டாலிக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் 149 சிசி ப்ளூ கோர் எஞ்சின் உள்ளது. தற்போது ஓபிடி-2பி இணக்கமானது. இந்த பைக்கில் 4.2 இன்ச் முழு வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது Y-Connect செயலி வழியாக ஸ்மார்ட்போன்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது. இது கூகுள் மேப்புடன் இணைக்கப்பட்ட டர்ன் பை டர்ன் வழிசெலுத்தலைக் கொண்டுள்ளது. வசதியாக நீண்ட தூரம் பயணிப்பதற்காக பைக்கின் ஹேண்டில்பார் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. கையுறைகள் அணிந்திருந்தாலும் கூட, சிறந்த அணுகலுக்ககாக ஹேண்டில்பாரில் உள்ள சுவிட்சுகள் சரிசெய்யப்பட்டுள்ளன.
வசதியான மற்றும் பயன்பாட்டுக்கு எளிமையாக இருப்பதற்கு முன்னுரிமை அளித்து ஹாரன் சுவி்ட்ச் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்கின் மூடி இப்போது விமான பாணி எரிபொருள் மூடியை கொண்டுள்ளது. இந்த ஸ்டைலான மூடி எரிபொருள் நிரப்பும்போதும் இணைக்கப்பட்டு இருக்கும், இது நடைமுறைத்தன்மையை மேலும் மேம்படுத்துகிறது. யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் இடரு ஒட்டானி பேசுகையில், எங்கள் வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு தலைமுறையுடனும் பரிணமித்து வரும் யமஹாவின் இந்திய பயணத்தில் எஃப்இசட் பிராண்ட் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த பிரிவில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயல்திறனை உயர்த்துவது மட்டுமல்லாமல் மேம்பட்ட ரைடர் மையப்படுத்தப்பட்ட புதுமைகளை கொண்டு வருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications