உணவு என்பது உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியமான விஷயம் மட்டுமே என்ற காலமெல்லாம் இப்போது மலையேறிவிட்டது. விதவிதமாக சாப்பிடவேண்டும் என்று ஒரு பெரும் பட்டாளமே உலகளவில் திரண்டு வாழ்கிறது. இதனால் புதுப்புது உணவுகளும் பன்னாட்டு உணவுக் கலாசாரங்களும் எல்லா நாடுகளிலும் பரவிவிட்டன.
எவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும் பரவாயில்லை வாயில் வைத்தால் அப்படியே பரவசம் ஏற்பட வேண்டும். அதுமட்டும் தான் இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 100, 150 கி.மீ. தள்ளி உள்ள ஒரு ஊரில் சுவையான ரெஸ்டாரென்ட் இருப்பதைக் கேள்விப்பட்டால் ஷேர் ஆட்டோவைப் பிடித்தாவது போய் சாப்பிட வேண்டும் என்று கிளம்பிவிடுகின்றனர்.

போதாக்குறைக்கு நிறைய ஃபுட் பிளாக்கர்கள், சோஷியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்களும் கார்களை எடுத்துக் கொண்டு எந்த ஊரில் எந்த உணவு சூப்பராக இருக்கும். இருப்பதிலேயே காஸ்ட்லியான உணவு வகை என்று வேறு விடியோக்களை எடுத்து யூடியூபிலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் போட்டுத் தாக்குகின்றனர்.
காசைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பான உணவுக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவழிக்கத் தயார் என்பவர்களுக்காக இங்கு உலகிலேயே காஸ்ட்லியான 6 ஐட்டங்களை இங்கு படைத்துள்ளோம். அள்ளிக்குங்க! அப்டியெல்லாம் செலவு செய்ய முடியாது என்பவர்கள் பார்த்து அனுபவியுங்கள்.
ஒயிட் ட்ரஃப்பிள்ஸ் (White truffles) : இத்தாலியின் சில பகுதிகளில் இந்த அரிய வகை உணவான ஒயிட் ட்ரஃப்பிள் என்ற ஐட்டம் மிக அதிகமான விலையில் கிடைக்கின்றது. எல்லா இடத்திலுமே ஒரு பவுண்டு விலை 3000 டாலர்களுக்கு மேலேதான் இருக்கின்றன. இந்த ஒயிட் ட்ரஃப்பிள் என்பது ஒரு பூஞ்சைக்காளான் வகையாகும். உலகிலேயே இதுதான் நம்பர் ஒன் காஸ்ட்லி பூஞ்சை காளான் ரகமாகும். சாப்பிடுவதற்கு வேற லெவல்ல இருக்கும்.
கோபி லுவாக் காபி (Kopi luwak coffee): கோபி லுவாக் காபிக்கு, சிவெட் காபி(civet coffee) என்று மற்றொரு பெயரும் உள்ளது. இந்த காபியைத் தயாரிக்கும் முறை முற்றிலும் தனித்துவமானது என்பதால் உலகிலேயே காஸ்ட்லியான காபியாக உள்ளது. சிவெட் டைஜெஷ்சன் முறையில் இந்த கோபி லுவாக் காபி தயாரிக்கப்படுகிறது. இந்த காபி விலை ஒரு கப் ரூ.8000 வரை விற்கப்படுகிறது.
குங்குமப்பூ (Saffron): குங்குமப்பூவை சிவப்புத் தங்கம் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். உலகிலேயே மிகக் காஸ்ட்லியான மசாலாப் பொருள் இது. பல கோடிக்காண பச்சை குங்குமப்பூவை உலரவைத்துப் பதப்படுத்தினால்தான் சில நூறு கிராம் குங்குமப்பூ கிடைக்கும். இதன் காரணமாகவே இதன் விலை விண்ணை முட்டும்வகையில் உள்ளது.
ஒரு கிராம் விலை ரூ.800 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது.
யுபாரி கிங் மெலான்ஸ் (Yubari king melons) : உலகிலேயே இவ்வளவு காஸ்ட்லியான பழத்தைப் பார்க்க முடியாது. யுபாரி கிங் மெலான்ஸ் அதன் இனிப்புச்சுவைக்கும், அமைப்புக்கும் தன்னிகரற்றது. ஜப்பானில் மட்டுமே இந்தப் பழம் விளைகிறது. எப்போதுமே இந்தப் பழத்தின் விலை டாப்பில்தான் இருக்கும். டிமாண்டும் குறையாது. விலையைக் குறைத்துப் பேசலாம் என்ற பேச்சுக்கே வழியில்லை.
மாட்சுடேக் மஷ்ரூம்கள் (Matsutake mushrooms) : ஜப்பானிய சமையலை மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் இந்த பூஞ்சைக் காளான் உலகளவில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. காரணம் இதன் மணம். பார்த்தாலே சுண்டியிழுக்கும். விலை ஒரு பவுண்டு எடை 1000 டாலர்கள் வரை இருக்கும். இந்திய ரூபாயில் அரை கிலோ ரூ.82,000 ஆகும்.
அல்மாஸ் கேவியர் (Almas caviar) : இந்த உணவுப்பொருளான அல்மாஸ் கேவியர் ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெலுகா ஸ்டர்ஜென்ஸ் (Beluga sturgeons) என்ற வகை மீன்களில் இருந்து கிடைக்கிறது. உண்மையில் இந்த பெலுகா ஸ்டர்ஜென்ஸ் மீன்களின் முட்டைகள்தான் அல்மாஸ் கேவியர். ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்போதே இந்த கேவியர்கள் 24 கேரட் தங்கத்திலான டின்களில் நேர்த்தியாக அடுக்கு வைக்கப்பட்டிருக்கும். உலகளவில் பலவகையான கேவியர்கள் கிடைக்கிறது என்றாலும் இந்த அல்மாஸ் கேவியர் தான் அவற்றுள் காஸ்ட்லியானது. அதன் விலை ஒரு கிலோ ரூ.29 லட்சம் ஆகும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications