நிதி நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள யெஸ் பேங்க் கடந்து வந்த பாதைகளை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
Recommended Video
இந்தியாவில் தனியார் துறை வங்கிகளில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த வங்கி தான் இந்த யெஸ் பேங்க்.
சொல்லப்போனால் இந்தியாவின் ஐந்தாவது மிகப்பெரிய தனியார் வங்கி என்றும் கூறப்படுகிறது.
யெஸ் பேங்க் தொடக்கம்
கடந்த 2003ம் ஆண்டில் ரானா கபூர் மற்றும் அசோக் கபூர் என்ற இருவரால் தொடங்கப்பட்டது தான் இந்த தனியார் வங்கி. அதிலும் வங்கி சேவையில் மிக நல்ல அனுபவம் உள்ளவர் தான் ரானா. சொல்லப்போனால் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் வங்கித் துறையில் அனுபவம் உடையவர். அதிலும் சுமார் 16 ஆண்டுகள் அமெரிக்க வங்கியிலேயே பணியாற்றியவர். மேலும் ANZ grindlays முதலீட்டு வங்கியில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
யார் இந்த ரானா கபூர்
டெல்லியில் பிறந்த ரானா, தனது பள்ளி கல்வியையும் இளநிலை பட்டப்படிப்பையும் டெல்லியில் படித்திருந்தாலும், எம்பிஏ எனும் முதுகலை பட்டத்தினை அமெரிக்காவில் படித்தார். பின்னர் தனது 1980ல் பேங்க் ஆப் அமெரிக்காவில் தனது வங்கி பணியை தொடங்கிய ரானா, அவரது உறவினர் அசோக் கபூருடன் இணைந்து யெஸ் பேங்கினை உருவாக்கினர்.
யெஸ் பேங்க் கிளைகள்
மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இவ்வங்கி கார்ப்பரேட் வங்கியாகவும், சொத்து மேலாண்மை, சில்லறை வங்கி சேவை மற்றும் மற்ற வங்கி சேவைகளிலும் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் ஜூன் 2019 நிலவரப்படி, 1,122 கிளைகளும், 1,220 ஏடிஎம்களும் இந்தியாவில் உள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
யெஸ் வங்கியின் வளர்ச்சி சீராக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின் போது, பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி தாராளமாக கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பின் நாளில் இந்த தாராள கடன்கள் தான் பெரும் வாரா கடன்களாக மாறின.
தொடரும் வீழ்ச்சி
இந்த நிலையில் அப்போதிலிருந்து யெஸ் பேங்கின் வீழ்ச்சி காண ஆரம்பித்தது என்றே கூறலாம். அதே ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில், வங்கியின் நிறுவனர்களில் 12% பங்குகளை தன்னகத்தே கொண்ட ஒருவரான அசோக் கபூர் உயிரிழந்தார். இன்னும் வங்கியின் நெருக்கடியினை அதிகரிக்கும் விதமாக இன்னும் அசோக் கபூரி இறப்புக்கு பின்பு பல பிரச்சனைகள் நிர்வாக ரீதியாக உருவாக தொடங்கின.
வாராக்கடனில் கோட்டை விட்ட வங்கி
இப்படியாக தொடர்ந்து ஒரு போராட்டமான மன நிலையில் இந்தி வந்த யெஸ் பேங்க் நிர்வாகம் வாராக்கடனிலும் அப்போது கோட்டை விட்டது. இது ஒருபுறம் இருக்க, வாராக் கடன்களின் அதிகளவு அதிகரித்துவிட்டதாக, யெஸ் வங்கிக்கு கடன் அளித்தவர்கள் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தனர். அப்போதிலிருந்தே ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்கு வரத் தொடங்கியது யெஸ் பேங்க்.
ரானா கபூர் விலக அறிவுரை
இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு வங்கியின் முதன்மை செயல் அதிகாரி பதவியிலிருந்து ரானா கபூரை விலகி இருக்க அறிவுறுத்திய ரிசர்வ் வங்கி, மூன்று மாதங்கள் கெடுவும் விதித்தது. இதன் பின்னரே கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரன்வித் கில்லை புதிய முதன்மை செயல் அதிகாரியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.
சட்ட விரோதமாக வர்த்தகம்
அந்த சமயத்தில் வங்கிக்கு பேரிடியாக அடகு வைக்கப்பட்டிருந்த ரானாவுக்கு சொந்தமான யெஸ் வங்கியின் பங்குகளை வங்கிக்கு கடன் அளித்தவர்கள் விற்றனர். இந்த நிலையில் தான் பங்குச் சந்தையில், சட்டவிரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக செபியின் விசாரணை வளையத்தில் யெஸ் பேங்க் சிக்கியது.
கடன் வாங்கியவர்கள்
இப்படி ஒரு நிலையில் யெஸ் பேங்கில் கடன் வாங்கிய பலர் தங்களது கடனினை திரும்ப செலுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐஎல் & எஃப் எஸ், சிஜி பவர், காக்ஸ் அன்ட் கிங்ஸ், ஆல்டிகோ, சிசிடி, எஸ்ஸல் குழுமம், எஸ்ஸார் பவர், வரதராஜ் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் யெஸ் வங்கியிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது
யெஸ் பேங்கை கட்டுப்பாட்டில் எடுத்திருக்கும் ஆர்பிஐ இந்த முடிவு தனி ஒருவரால் எடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் நலன் கருதி உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்குப் பின்னே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நிதி நெருக்கடி சிக்கலில் சிக்கியுள்ள யெஸ் பேங்கை மீட்பதற்கான சில திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்.
பணம் பத்திரமாக உள்ளது
இதே வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது. ஆக மக்கள் யாரும் கவலை பட வேண்டாம். உங்கள் பணம் பத்திரமாக உள்ளது என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் யெஸ் பேங்கை மீட்கும் முயற்சியில் எஸ்பிஐயும், எல்.ஐ.சியும் வங்கிக்கான மூலதனத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications