யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு டெல்லி உயர் நீதிமன்றம், யெஸ் வங்கிக்கு சுமார் 466.51 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் பணச் சலவை வழக்கில் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
ராணா கபூர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி சுதிர் குமார் ஜெயின் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
மோசடி குற்றச்சாட்டு
2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கவுதம் தாபர், அவன்தா ரியாலிட்டி லிமிடெட், ஒய்ஸ்டர் பில்ட்வெல் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற தரப்பினர் மீது நம்பிக்கை மீறல், ஏமாற்றுதல், கிரிமினல் சதி மற்றும் பொதுப் பணத்தைத் திருடி, முறைகேடாகப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
யெஸ் வங்கி
இந்த மோசடி மூலம் யெஸ் வங்கிக்கு 466.51 கோடி ரூபாய் அளவிலான இழப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு முன்பு நீதிமன்ற விசாரணையில் ராணா கபூருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
15 பேருக்கும் ஜாமீன்
இந்தத் தீர்ப்பின் போது இவ்வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிபதி கபூருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை மற்றும் தீவிரமானவை என்று அறிவித்த காரணத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது குற்றம் சாட்டப்பட்ட 15 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
அமலாக்க இயக்குநரகம்
நீதிமன்ற விசாரணையின் போது, ராணா கபூர்-ன் ஜாமீன் மனுவுக்கு அமலாக்க இயக்குநரகம் கடுமையாக எதிர்த்தது மட்டும் அல்லாமல் இந்த மோசடிக்கு முக்கிய மற்றும் அடிப்படை காரணம் ராணா கபூர் என்பதால் இவருக்கு ஜாமீன் வழங்க கூடாது எனத் தெரிவித்தது.
ராணா கபூர் தரப்பு வாதம்
ஆனால் விசாரணையின் போது ராணா கபூர்-ஐ அமலாக்க இயக்குநரகம் கைது செய்யப்படவில்லை என்றும், குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவரைக் காவலில் அனுப்புவதற்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் ராணா கபூர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் மனு
ஜாமீன் மனுவை நிராகரித்த சிறப்பு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி கெளதம் தாப்பர் அல்லது ராணா கபூர் ஆகியோரிடம் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்று சில தவறுகளைச் செய்ததாகத் தெரிகிறது.
DHFL கடன் மோசடி
இந்திய வங்கிகளில் தொடர்ந்து கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு மிகப்பெரியதாக வெடித்துள்ளது. யெஸ் வங்கி - டிஎச்எஃப்எல் 3700 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.3,700 கோடி கடன்
சில ஆண்டுகளுக்கு முன்பு, ராணா கபூர் தலைமையிலான யெஸ் வங்கியில் இருந்து டிஎச்எஃப்எல் பெற்ற ரூ.3,700 கோடியில் கணிசமான பகுதி ரேடியஸ் குழுமத்திற்குத் திருப்பி விடப்பட்டதைச் சிபிஐ அறிந்தது. இது தொடர்பான விசாரணையில் இக்கடன் தொகையைப் பல்வேறு வகையில் மோசடி செய்தது மட்டும் அல்லாமல் ரூ.600 கோடி கடனை கிக்பேக்-காகத் தனது மகள்கள் நிறுவனமான DOIT அர்பன் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்குக் கடனாகப் வந்துள்ளதாகத் தகவல் வெளியானது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications