பலத்த நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் பேங்கின் நிர்வாகத்தினை ரிசர்வ் வங்கி தனது கட்டுபபாட்டினுள் கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் வரையில் மட்டும் பனம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது.
இதனால் பீதியடைந்த வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தினை எப்படியாவது உடனடியாக முழுவதும் எடுத்து விட வேண்டும் என்று ஏடிஎம்- களை நாட தொடங்கியுள்ளனர்.
அதுமட்டும் அல்லாது தங்களது மொபைல் வங்கி சேவை மூலமாகவும், இணைய வங்கி சேவை மூலமாகவும் எப்படியாவது பணத்தினை வேறு கணக்கிற்காவது மாற்றிவிட வேண்டும் என்றும் துடித்தனர்.
சர்வர் டவுன்
ஆனால் ஒரே நேரத்தில் பலரும் இப்படி தங்களது பணத்தை எடுக்க முயன்றதால் ஒட்டுமொத்த சர்வரும் மெதுவாகி போன நிலையில், பணம் எடுக்க முடியாமலும், மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்ற முடியாமலும் சிக்கித் தவித்து வருகின்றனர். எனினும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர் என்று தான் கூற வேண்டும்.
அதிகரித்த வாராக்கடன்
நல்ல முறையில் இயங்கி கொண்டிருந்த ஒரு வங்கி, இப்படி இரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதே ஏன்? வாருங்கள் பார்க்கலாம். கடந்த மார்ச் 2015ம் ஆண்டு நிலவரப்படி இந்த வங்கியின் தோராய வாராக்கடன் 313 கோடி ரூபாய் தான். ஆனால் கடந்த மார்ச் 2018 மற்றூம் 2019களில் இந்த நிலைமை மிக மோசம். இது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது எனலாம். அந்தளவுக்கு நாளுக்கு நாள் வாராக்கடன் விகிதம் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.
தோல்வியில் முடிந்த நிதி திரட்டும் முயற்சி
இந்த நிலையில் தான் மார்ச் 2019ல் அதன் தோராய வாராக்கடன் விகிதம் 7,882 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது யெஸ் பேங்க் கொடுத்த ஒட்டுமொத்த கடனில் 3% மேல் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த வாராக்கடன் விகிதமான தற்போது சுமார் 10,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கூடுதல் நிதி திரட்டும் முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இப்படி ஒரு நடடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நம்பிக்கை காப்பாற்ற நடவடிக்கை
இவ்வாறு கடன் சுமையில் தத்தளித்து வரும் யெஸ் பேங்கினை தான் தற்போது ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வங்கி மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இப்படி ஓரு அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த யெஸ் பேங்க்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் தற்போது அதிகளவிலான வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் செயல்படும்
மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.
அச்சம் வேண்டாம்
மேலும் இந்த நடவடிக்கையினால் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. இதெல்லாவற்றையும் விட மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications