சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். பொதுவாக புதிய வணிகத்தை தொடங்குவதற்கு பெரிய முதலீடு தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். மேலும் நிதிப் பற்றாக்குறையும் அவர்களது தொழில் தொடங்கும் கனவை கனவாகவே ஆக்கி விடுகின்றன.
இருப்பினும் ஒரு முறை முதலீடு செய்து ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் ஈட்டும் பல தொழில்கள் உள்ளன. அதில் மிக எளிமையான மற்றும் நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ள தொழில் என்றால் பேப்பர் நாப்கின் வணிகம்தான்.

அன்றாட வாழ்க்கையில், முக நாப்கின்கள், டாய்லெட் பேப்பர், பேப்பர் டவல்கள் மற்றும் டிஸ்யூ பேப்பர் என பல விதமாக காகித நாப்கினை நாம் பயன்படுத்துகிறோம். வீடுகள், கார்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
மக்களின் வாழ்க்கையில் காகித நாப்கினுக்கான தேவை இருப்பதால் தைரியமாக காகித நாப்கின் தயாரிப்பு தொழிலில் இறங்கலாம். உங்கள் தொழிலை தொடங்க அரசாங்கமும் உங்களுக்கு உதவும். எனவே காகித நாப்கின வர்த்தகத்தை தொடங்கி உங்கள் தொழில் முனைவோர் கனவை நிஜமாக்கலாம். றை முதலீடு, ஆண்டு முழுவதும்
காகித நாப்கின் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கு, தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள், போக்குவரத்து, நுகர்பொருட்கள், எழுதுபொருட்கள், பராமரிப்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும்.
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, இந்த தொழில் தொடங்க சுமார் ரூ.13 லட்சம் தேவைப்படும். அவ்வளவு பணம் இல்லையென்றால், ரூ.5 லட்சத்தை உங்க மூலதனமாக போடுங்க, எஞ்சிய தொகைக்கு கடன் வாங்கி முதலீடு செய்யுங்க
அதுவும் இல்லையென்றால், உங்களின் தொழில் முயற்சிக்கு உதவ அரசாங்கம் எப்போதும் காத்திருக்கிறது. தொழில் தொடங்குவதற்காக பிரதமர் மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
இந்த கடனை பெற எந்த பிணையமும் தேவையில்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் பணம் வழங்கப்படும். இதனால் நீங்கள் எளிதாக தொழிலை தொடங்கலாம். காகித நாப்கின் தொழிலில் உங்களுக்கு லாபம் உற்பத்தி திறனை பொறுத்து கிடைக்கும்.
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, முதல் ஆண்டில் உங்களுக்கு நிகர லாபமாக ரூ.3.66 லட்சம் கிடைக்கும். இரண்டாவது ஆண்டில் நிகர லாபம் ரூ.4.19 லட்சமாகவும், மூன்றாவது ஆண்டில் ரூ.5.01 லட்சமாகவும், நான்காவது ஆண்டில் ரூ.5.77 லட்சமாகவும், ஐந்தாவது ஆண்டில் ரூ.6.50 லட்சமாகவும் இருக்கும். அதனால் நல்ல லாபம் கிடைக்கும் காகித நாப்கின் உற்பத்தி தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications