இந்தியா முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன . பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா தனி நாடாக பிறந்தது.
இந்தியாவின் வளர்ச்சி: பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவின் வளத்தை பெருமளவில் கொள்ளை அடித்திருந்த நிலையில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கிய இந்தியா தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடாக திகழ்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் ,கல்வி ,தொழில் துறை , சேவை துறை என பலவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பெற்றிருக்கின்றன. அதே வேளையில் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளன.

பால் விலை என்ன?: 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பால், அரிசி, கோதுமை, பெட்ரோல், தங்கம் உள்ளிட்டவற்றின் விலையை கேட்டால் வாயடைத்து போவீர்கள். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு, அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பாலின் விலை 12 பைசா மட்டும் தான். அதே போல ஒரு கிலோ நெய்யின் விலை 2.5 ரூபாயாக தான் இருந்தது. சர்க்கரை ஒரு கிலோ 40 பைசாவுக்கு தான் விற்பனை செய்யப்பட்டது.
1 ரூபாயில் குடும்பமே வாழலாம்: உணவில் அதிகம் பயன்படுத்தும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ரூபாய்க்கு பல கிலோவிற்கு கோதுமை, அரிசி உள்ளிட்டவற்றை வாங்க முடிந்தது . ஒரு குடும்பமே ஒரு வாரத்திற்கான உணவினை ஒரு ரூபாய் பட்ஜெட்டிலேயே முடித்து கொள்ள முடியும். ஆனால் இந்த 1 ரூபாய் கூட கிடைக்காமல் தான் மக்கள் அல்லல்பட்டனர்.

தங்கம் விலை எவ்வளவு?: வறுமை, உணவு பஞ்சம் தனிநபர் வருமானம் மிகக்குறைவு என பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டிருந்தோம் . நாள்தோறும் தங்கத்தின் விலை உயர்கிறது உயர்கிறது என நாம் செய்திகளில் படிக்கிறோம் ,இந்த ஆண்டு தங்கம் விலை 10 கிராம் ஒரு லட்சம் ரூபாயை கடந்து விட்டது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? 88 ரூபாய் தான். வெறும் 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் தான் இப்போது ஒரு லட்சம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கமே 8 ரூபாய்க்கு கிடைத்தது.
பெட்ரோல் விலை: நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல் விலை 1947 ஆம் ஆண்டு ஒரு லிட்டரே 27 பைசாவுக்கு தான் விற்பனை செய்யப்பட்டது . ஆனால் அந்த காலத்தில் பெரும்பாலான மக்களிடம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் கிடையாது. பெரிய அளவில் சாலை வசதிகளும் கிடையாது மக்கள் எங்கு சென்றாலும் நடந்த தான் சென்று வருவார்கள் அல்லது பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துவார்கள்.
விமான டிக்கெட்: 1947ஆம் ஆண்டு ஏர் இந்தியா மட்டுமே இந்தியாவில் விமான சேவை வழங்கி வந்தது. அப்போது டெல்லி முதல் மும்பை வரையிலான விமான கட்டணம் வெறும் 140 ரூபாய் தான் . இப்போது அது பல மடங்கு உயர்ந்து இருக்கிறது.
More From GoodReturns

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!



Click it and Unblock the Notifications