கொஞ்சம் உங்க போன் தரீங்களா? இப்படி யாரும் கேட்டா ஏமாந்துடாதீங்க? உடனே உங்க அக்கவுண்ட் காலி ஆகிடும்!

ஒருவருக்கு ஆபத்தில் உதவுவது மிகச் சிறந்த நற்குணங்களில் ஒன்று. ஆனால் இனிவரும் நாட்களில் இதை செய்வதும் தவறாக முடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்கள் போனில் பேட்டரி இல்லை எனக் கூறி பிறருடைய மொபைலை வாங்கி அதன் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஒருவர் நம்மிடம் வந்து அவர்களுடைய மொபைலில் சார்ஜ் இல்லை எனக் கூறி, அவசரமாக ஒரு கால் செய்ய வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக நாம் மொபைலை கொடுப்போம் அல்லவா?

செரோதா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நிதின் காமத் இதுபோன்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி தனது X பதிவில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு அந்நியர் உங்களிடம் வந்து அவசரமாக அழைப்பு விடுக்க வேண்டும் என்று சொல்லி உங்கள் மொபைலை கேட்கிறார்.. பெரும்பாலான நல்லெண்ணம் கொண்டவர்கள் தங்கள் மொபைலை கண்டிப்பாக கொடுப்பார்கள். ஆனால் இதுதான் ஒரு புதிய மோசடி.

 கொஞ்சம் உங்க போன் தரீங்களா? இப்படி யாரும் கேட்டா ஏமாந்துடாதீங்க? உடனே உங்க அக்கவுண்ட் காலி ஆகிடும்!

சாமர்த்தியமாக பிறரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி வங்கியிலிருந்து பணம் பறிக்க தேவைப்படும் அனைத்து விவரங்களையும் எடுத்து உதவி செய்தவருக்கே உபத்திரம் கொடுப்பதுதான் இந்த மோசடி.

மோசடி எவ்வாறு செயல்படுகிறது?: ஒருவர் உங்களிடம் வந்து உதவியாக மொபைலை தரும்படி கேட்பார். முதலில் உங்களுக்கு உதவி செய்யலாம் என்று தோன்றினாலும்.. மோசடி செய்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்களுடைய சாதனத்தில் தேவையான விவரங்களை எடுத்து விடுவார் அல்லது தீங்கிழைக்கும் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்துவிடலாம் அல்லது உங்களுடைய அனைத்து அழைப்புகள் மற்றும் செய்திகளை மோசடிக்காரர்கள் தங்களுடைய நம்பருக்கு மாற்றி அமைக்க ஃபார்வேர்ட் கால்ஸ் அண்ட் மெசேஜை ஆன் செய்யலாம்.

இதனால் உங்களுடைய வங்கி அறிவிப்புகள், OTP-கள் போன்றவை அவர்களுடைய நம்பருக்கும் அனுப்பப்படும். அதன் பிறகு மொபைல் போனை திருப்பிக் கொடுத்தும் உங்களுடைய கணக்குகளை பிறர் நிர்வகிக்கும் நிலை ஏற்படும். சந்தேகமே இல்லாத வகையில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்து உங்கள் அக்கவுண்ட் காலியாகிவிடும்.

பாதுகாப்பாக இருப்பதற்கான டிப்ஸ்கள்: இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள யாரேனும் அந்நியர் உங்களிடம் மொபைலை கேட்டால் அவர்களுக்கு நீங்களே அழைப்பு விடுத்து ஸ்பீக்கரில் போட்டு கொடுக்கவும்.

உதவி செய்த பிறகு உங்களுடைய மொபைலில் செட்டிங்ஸ்-ஐ சரி பார்த்து கால் ஃபார்வர்டிங் ஆப்ஷன் எனேபிள் செய்யப்பட்டு இருந்தால் அவற்றை டிசேபிள் செய்யவும். பாஸ்வேர்டுகள் ஓடிபி-கள் போன்ற முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம்.

ஒரு வேலை மோசடி குறித்து நீங்கள் சந்தேகப்பட்டால் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் கிரைம் நம்பருக்கு அழைப்பு விடுக்கவும். இன்றைய உலகில் நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மொபைல் போன் முக்கியம். அதே போல தேவைப்படும் நேரத்தில் மற்றவர்களுக்கு உதவுவதும் நல்லது தான். ஆனால் கவனமாக இருப்பதும் அதே அளவு முக்கியம். கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது பெரிய நிதி இழப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+