உலக நாடுகளின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேலையில், பல ஆண்டுகளாகப் படு மோசமான நிலையில் இருக்கும் ஒரு நாடு தான் ஜிம்பாப்வே.
எந்த ஆட்சி வந்தாலும் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கும் ஜிம்பாப்வே நாட்டில் நாணய பரிமாற்றத்தில் முக்கியமான முடிவை எடுத்துள்ளனர்.
அதாவது அந்நாட்டின் பணவீக்கத்தையும்,மோசமான நாணய மதிப்பைத் தங்கத்தை வைத்துச் சரி செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே உள்ளூர் நாணயம் வியப்படையும் வகையில் மதிப்பை இழந்து வருவதால், அதிகப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த மாத இறுதியில் தங்க நாணயங்களை அந்நாட்டு அரசும், மத்திய வங்கியும் விற்கத் துவங்க உள்ளது.
தங்க நாணயங்கள்
தங்கத்தின் சர்வதேச விலை மற்றும் உற்பத்திச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும் என்று ஜிம்பாப்வேயின் மத்திய வங்கியின் ஆளுநர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
Mosi-oa-tunya
ஜூலை 25 முதல் அரசு வெளியிடும் இந்தத் தங்க நாணயங்களை ஜிம்பாப்வே டாலர்கள், அமெரிக்க டாலர்கள் மற்றும் பிற நாணயங்களைக் கொண்டு வாங்கலாம்.இந்த தங்க நாணயங்களை "Mosi-oa-tunya" என்று அழைக்கப்படும், அதாவது விக்டோரியா நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் "The Smoke Which Thunders".
தங்கம் தான் விமோசனம்
பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கம் பாதுகாப்பான புகலிடமாகவும், பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், பெஞ்ச்மார்க் தங்கத்தின் விலை மார்ச் மாதத்தில் இருந்த உயர்விலிருந்து 16% குறைந்துள்ளது.
நிலையான நாணயம்
ஜிம்பாப்வேயின் தங்கக் காசுகள் ஜிம்பாப்வே டாலருடன் ஒப்பிடும் போது நிலையான நாணயமாக இருக்கும் என நம்புகிறது அந்நாட்டு அரசு.
அமெரிக்க டாலுருக்கு எதிரான ஜிம்பாப்வே டாலரின் மதிப்பு 361.9 டாலர், அமெரிக்க டாலுருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.15 ரூபாய்.
192% பணவீக்கம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டாலருக்கு எதிராக மதிப்பில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஜிம்பாப்வே டாலரின் மதிப்புக் குறைந்துள்ளது. இதற்கிடையில், கடந்த மாதம் ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் 192% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications