பொதுவாக கார்பரேட் நிறுவனங்கள் ஊழியர்கள் மீதும் ஊழியர்கள் நலன் மீதும் அதிகப்படியான அக்கறை செலுத்தாது என்ற கருத்து உண்டு, ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் நம்ம சென்னையில் இருப்பது பெருமைப்படும் விஷயம், ZOHO சென்னையில் இருந்துக்கொண்டு உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்து தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
ZOHO அன்று முதல் இன்று வரையில் கிராமத்தில் இருந்து வரும் இளம்தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதில் துவங்கி ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகள் சேவைகளை அலுவலகத்திற்குள்ளேயே அளிப்பதில் மிகவும் ஸ்பெஷல். தற்போது சென்னையில் இருக்கும் பிரம்மாண்ட தலைமை அலுவலகத்திற்கு அருகில் மற்றொரு பெரிய அலுவலகத்தையும், தென்தமிழகத்தில் புதிய அலுவலகத்தையும் கட்டி வருகிறது.

இந்த நிலையில் ZOHO அலுவலகத்தில் அளிக்கப்படும் உணவு குறித்த போட்டோ தற்போது சமுக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது, இன்று பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு இலவசமாக அல்லது சிறு தொகையை பெற்றுக்கொண்டு உணவு அளிப்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும், பல வருடங்களாக ZOHO இதை தரமான செய்து வருகிறது. திடீரென ZOHO அலுவலகத்தின் உணவு குறித்து பேச முக்கிய காரணமும் உண்டு.
ZOHO நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் பர்வஸ் சிங் தனது டிவிட்டரில் ZOHO அலுவலகத்தில் இருக்கும் உணவு என ஒரு போட்டோ பகிர்ந்தார், இது ZOHO ஊழியர்களை தாண்டி தற்போது ஒட்டுமொத்த ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் மத்தியில் இரவோடு இரவாக டிரெண்டாகியுள்ளது.
ஜூலை 20 ஆம் தேதி காலையில் ZOHO நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் துணை தலைவர் பர்வஸ் சிங் தனது டிவிட்டரில் ZOHO அலுவலகத்தில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பான உணவு என ZOHO THALI மற்றும் மாலை 4 மணிக்கு கிடைக்கும் சிறப்பான பில்டர் காஃபி ஆகியவற்றின் போட்டோ-வ பகிர்ந்தார். இந்த போஸ்ட்-ஐ இதுவரையில் 16600 பேர் பாத்துள்ளனர்.

இதேபோல் கடந்த வருடமும் இதேபோன்ற ஒரு போட்டோவை பகிர்ந்தார், அதற்கு ZOHO நிறுவனர் கடந்த முறை சென்னை அலுவலகம் சென்ற போது உணவு சிறப்பாக இருந்த காரணத்தால் அதிகமாக சாப்பிட்டேன், நம்முடைய Chef அற்புதம். நம்முடைய அலுவலகம் பலருக்கும் பிடிக்க முக்கியமான காரணம் உணவு தான் என தெரிவித்தார் ஸ்ரீதர் வேம்பு.

More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications