சர்வதேச அளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது.
இந்த சூழலில் தங்கத்தின் விலையை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கும் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு இந்திய இல்லத்தரசிகள் தான் புத்திசாலித்தனமான நிதி மேலாளர்கள் என உதய் கோட்டக் ஒருமுறை பாராட்டியதை குறிப்பிட்டு இருக்கிறார். தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவை எட்டி இருக்கும் சூழலில் ஸ்ரீதர் வேம்புவின் இந்த பதிவு வெளியாகியிருக்கிறது.

உதய் கோட்டத்தின் கருத்தை நான் முழு மனதுடன் ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார். தங்கத்தின் மீதான இந்தியர்களின் அன்பும் காகித சொத்துக்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையும் தான் நம்முடைய நீண்ட கால நிலைத்தன்மை மற்றும் நாகரீக தொடர்ச்சியின் அடித்தளம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
தங்கம் என்பது தான் பணம் ஏழ்மையான இந்தியருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது அவர்களின் இந்த அறிவு தான் அவர்களின் சக்தி என குறிப்பிட்டு இருக்கிறார். உலக பொருளாதார நிலைமைகள் மோசமடைந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்கும், அதற்கு இந்தியர்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் தங்கமே காரணம் என கூறியுள்ளார்.

இந்தியர்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் மூலம் இந்த பொருளாதார சரிவிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருக்கும் என ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவாக திங்கட்கிழமை அன்று எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் கோல்ட் ஜூன் பியூச்சர்ஸ் 99 ,178 ரூபாய் என்ற அளவை எட்டியது. ஜிஎஸ்டி உடன் இணைத்து பார்த்தால் ரீடெய்ல் சந்தையில் பார்க்கும்போது 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியது.
தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தங்கத்தை வாங்கி சேமிக்க வேண்டும் என்ற இந்தியர்களின் அறிவு தான் இந்திய பொருளாதார நிலைத் தன்மைக்கு காரணம் என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.
அண்மை காலமாக இந்தியாவில் பலரும் ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்யுங்கள் என கூறி வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்திய ஈக்விட்டி சந்தை சரிவிலும், தங்கம் விலை ஏறுமுகத்திலும் இருக்கிறது. ஸ்ரீதர் வேம்புவின் எக்ஸ் பதிவும் தங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!



Click it and Unblock the Notifications