நிப்டி50 இன்டெக்ஸ் அரையாண்டுக்கு ஒரு முறை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. என்எஸ்இ இன்டெக்ஸ் லிமிடெட்டின் இன்டெக்ஸ் பராமரிப்பு துணைக் குழு இந்த பணியை செய்கிறது. இந்த இன்டெக்ஸ் அல்லது பட்டியலில் இடம் பெற்றுள்ள பங்குகளை மதிப்பீடு செய்து, நீக்க வேண்டிய நீக்கி மற்றும் சேர்க்க வேண்டிய பங்குகளையும் சேர்த்து இன்டெக்ஸ் சமநிலைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 மற்றும் ஜூலை31 ஆகியவை கட் ஆஃப் தேதிகளாக செயல்படுகின்றன. முந்தைய ஆறு மாதங்களில் பங்குகளின் சராசரி செயல்திறனை அடிப்படையாக கொண்டு பங்குகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த இன்டெக்ஸில் இடம் பெறுவதற்கான முதல் தகுதி அந்த பங்கு எஃப் அண்ட் ஓ பிரிவில் இருக்க வேண்டும்.
என்எஸ்இ இன்டெக்ஸ் லிமிடெட்டின் இன்டெக்ஸ் பராமரிப்பு துணைக் குழு நிப்டி 50 இன்டெக்ஸில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமெட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய 2 நிறுவனங்கள் நிப்டி 50 இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ளன. அதேவேளையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய 2 நிறுவனங்கள் இந்த இன்டெக்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

சோமெட்டோ நிறுவனத்தின் 6 மாத சராசரி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1.69 லட்சம் கோடியாகவும், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சராசரி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1.04 கோடியாகவும் உள்ளது. அதேசமயம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சராசரி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.60,928 கோடி மட்டுமே. மேலும், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் சரசாரி பங்குகளின் மதிப்பு ரூ.64,151 கோடி. ஆக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் 6 மாத சராசரி பங்குகளின் சந்தை மதிப்பை காட்டிலும் சோமெட்டோ மற்றும் ஜியோ ஆகியவற்றின் மொத்த சந்தை மதிப்பு 1.5 மடங்கு அதிகமாகும்.
இந்த நிப்டி 50 இன்டெக்ஸ் மாற்றம் 2025 மார்ச் 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நிப்டி 50 மட்டுமல்லாம், நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி மிட்கேப் 50 போன்ற இன்டெக்ஸ்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications