இந்தியாவின் முன்னணி உணவு விநியோக தளங்களான சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகியவை "Competition laws" என்று சொல்லப்படுகிற சட்டங்களை மீறி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா (CCI) சமீபத்தில் வெளியிட்டது. ராய்ட்டர்ஸ் செய்தியின் படி ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ தங்களுக்கென்று பிரத்தியேக ஆன்லைன் அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. இந்த அப்ளிகேஷன்களில் குறிப்பிட்ட சில உணவகங்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும் வழக்கத்தை கொண்டிருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
CCI விசாரணையில் சொமேட்டோ குறிப்பிட்ட சில உணவகங்களுடன் மட்டும் ஒப்பந்தங்களை செய்துகொண்டு குறைந்த கமிஷன் விகிதத்தை வழங்கியுள்ளது. அதேபோல ஸ்விக்கி நிறுவனம் தங்களுடைய தளத்தில் மட்டும் பட்டியலிட ஒப்புக்கொள்ளும் உணவகங்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

CCI விசாரணைப் பிரிவு, ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ உணவகங்களுடன் போட்ட ஒப்பந்தங்கள் சந்தையின் போட்டித் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது. 2022-ஆம் ஆண்டில், இந்திய தேசிய உணவக சங்கம் (National Restaurant Association of India) இந்த தளங்களின் தாக்கம் குறித்து கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.
மேலும் CCI-யின் விசாரணையைத் தொடர்ந்து சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன. மேலும் இரண்டு தளங்களுமே வெவ்வேறு உணவகங்களுடன் சேர்ந்து தங்களுக்கு ஏற்றார் போல ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அதோடு நிறுவனம் கடுமையான விலை கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.
மேலும் ஸ்விக்கியுடன் கூட்டணி சேர்ந்த உணவகங்கள் விலை சமநிலையை பராமரிக்கவில்லை என்றால் அவற்றின் தரவரிசை கீழே தள்ளப்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ அப்ளிகேஷன்களில் மேலிருந்து கீழாக உணவகங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த வழக்கு தற்போது சிசிஐ-யின் இறுதி விசாரணைக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் அபராதங்கள் மற்றும் தேவையான மாற்றங்கள் செய்வது குறித்தும் முடிவு எடுக்கப்படவுள்ளது. அனால் இந்த 2 உணவு விநியோக தளங்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. சொமேட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு, இது 2021-ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்டதிலிருந்து தோராயமாக $27 பில்லியனை எட்டி உள்ளது
Swiggy தற்போது அதன் IPO மூலம் $11.3 பில்லியன் மதிப்பீட்டை எதிர்பார்க்கிறது. Macquarie Capital-இன் கணிப்புகளின்படி, 2024-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு ஆர்டர் மதிப்பு $3.4 பில்லியனை எட்டும் என்று கணித்துள்ளது. இது சொமேட்டோ நிறுவனத்தின் ஆர்டர்களை விட 25 சதவீதம் குறைவாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications