இந்தியாவில் தற்போது பல கோடி மக்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை ஆன்லைன் புட் டெலிவரி துறையில் பெற்றுள்ளனர். குறிப்பாக படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்கள் பார்ட் டைம்-ல் தங்களுக்கு பிடித்தமான வேலையை தேடிக்கொண்டு இத்தகையை புட் டெலிவரியை செய்கின்றனர்.
இன்னும் சிலர் 50 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் இந்த புட் டெலிவரியை செய்கின்றனர். ஆனால் பலருக்கு வாழ்வாதாரமாகவே விளங்குகிறது இந்த புட் டெலிவரி சேவை.
இதனால் கையில் ஒரு ஸ்மார்ட்போன், ஓட்டி செல்ல ஒரு வாகனம் இருந்தால் போதும் மாதம் 15000 முதல் 30000 ரூபாய் வரையில் சம்பாதிக்கும் வாய்ப்பை இந்த ஆன்லைன் புட் டெலிவரி சேவைகள் அளிக்கிறது. ஆனால் இதுவும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் கடினமான வேலையாக தான் உள்ளது.

இப்படியிருக்கையில் தற்போது அனைத்து ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் சேவை தளங்கள் பெண்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்க முடிந்துள்ளனர். பல நிறுவனங்கள் அவர்களுக்கு சிறப்பு சலுகை, உதவிகளும் செய்கின்றனர்.
இப்படி உடல் ஊனமுற்றவர் ஒருவர் சோமேட்டோ டெலிவரி செய்யும் பணியை தனது 3 சக்கர வாகனத்தில் செய்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இவருடைய வாகனம் பேட்டரி மூலம் இயங்க கூடிய ஒரு எலர்க்ட்ரிக் வாகனமாக டிசைன் செய்து வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்ட செல்கிறது.
இந்த வீடியோ யார், எப்போது எடுத்தது என்ற விபரம் தெரியவில்லை, ஆனால் கமல்தீப் சிங் சோக்கி என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டு ஊனம் ஒரு தடையில்லை, சவால்-ஐ தாண்டி வரும் ஒரு படி மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இந்த டெலிவரி ஊழியரின் வாழ்க்கை, பணியை பார்க்கும் போது நம்மில் பலரின் வாழ்க்கை மிகவும் சிறந்தாக இருக்கிறது என்பதே உண்மை. எனவே வாழ்க்கையில் குறை கூறாமல் தொடர்ந்து நகர்ந்துக்கொண்ட இருக்க வேண்டும். வாழ்க்கையை கொண்டாடவும், மகிழவும் ஆயிரம் விஷயங்கள் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என கமல்தீப் சிங் சோக்கி தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications