கூகுள் பே உள்பட இந்தியாவில் பல டிஜிட்டல் பணபரிவர்த்தனை அம்சங்கள் உள்ளன என்பதும் அவை அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜொமைட்டோ ஆன்லைன் பரிவர்த்தனையை தொடங்கியுள்ளது.
ஜொமைட்டோ பே என்று அழைக்கப்படும் இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை உணவு ஆர்டர் செய்பவர்கள் உள்பட அனைவரும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜொமைட்டோ - ஸ்விக்கி
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்கள் ஜொமைட்டோ மற்றும் ஸ்விக்கி என்பது தெரிந்ததே. இரு நிறுவனங்களும் இந்தியாவில் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிகார்ன் நிறுவனங்கள்
கனடாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று எடுத்த உணவு நிறுவனங்களின் பட்டியலில் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய யூனிகார்னின் ஒரு பகுதி ஆகும். யூனிகார்ன் என்றால் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து மதிப்பு வைத்திருக்கும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜொமைட்டோ பே
இந்த நிலையில் ஜொமைட்டோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ஜொமைட்டோ பே என்ற புதிய அம்சத்தை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக இந்த வசதி புதுடெல்லி, மும்பை, பெங்களூர், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் சென்னை உள்பட பல நகரங்களில் இந்த வசதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள்
இதன்படி உணவு ஆர்டர் செய்யும் ஜொமைட்டோ வாடிக்கையாளர்கள் ஜொமைட்டோ பே மூலமாகவே பணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜொமைட்டோ பே மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை
தற்போது ஜொமைட்டோவில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் கூகுள் பே உள்பட பல ஆன்லைன் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஜொமைட்டோ பே மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவது மிகவும் வசதியான ஒன்றாக கருதப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications