இந்தியாவின் இரண்டு பெரிய உணவு டெலிவரி சேவை நிறுவனங்களான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆகியவை தற்போது தீவிர வரி அமைப்புகளின் கண்காணிப்பு கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் முதல் படியாக Zomato மற்றும் Swiggy நிறுவனங்களுக்கு சுமார் 750 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆன்லைன் உணவு விநியோக சந்தையில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கும் சோமேட்டோ நிறுவனத்திற்கு, ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் (DGGI) சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு மற்றும் சேவை வரி நோட்டீஸை வெளியிட்டுள்ளது. இதேபோல் ஸ்விக்கி நிறுவனத்திற்கும் DGGI அமைப்பு சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி என்பது ஒரு சேவையாக ஜிஎஸ்டி அமைப்பு கருதுவதால் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் Zomato மற்றும் Swiggy நிறுவனங்களுக்கு ஜூலை 2017 முதல் மார்ச் 2023 வரையிலான வர்த்தகத்திற்கு ஜிஎஸ்டி வரி நிலுவையை செலுத்துவதற்கு இரு நிறுவனங்களும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 2023 காலாண்டில் சோமேட்டோ நிறுவனம் 2வது முறையாக லாபத்தை பதிவு செய்து இக்காலாண்டில் 36 கோடி ரூபாய் நிகர லாபத்தைப் பெற்றுள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சோமேட்டோ நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளின் மூலம் சுமார் 2,848 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் 1,661 கோடி ரூபாயில் இருந்து 72 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிலையில் ஸ்விக்கியும் விரைவில் லாபகரமான நிறுவனமாக மாறுவதற்கான முயற்சியில் இருக்கும் வேளையில், ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தின் 750 கோடி ரூபாய் மதிப்பிலான வரி நோட்டீஸ் டிசம்பர் காலாண்டில் மீண்டும் நஷ்டத்திற்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications