வருகிற 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு, ஆதார் கார்டு வைத்திருக்கும் குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அந்த தேதிக்குள் முகம், கருவிழி, கைரேகை போன்ற பயோமெட்ரிக் அப்டேட்டை செய்தால் கட்டணத்தில் இருந்து தப்பிக்கலாம். இந்த பயோமெட்ரிக் அப்டேட்டை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
2025ஆம் ஆண்டில் ஆதார் அப்டேட் கட்டணம் (Aadhaar Update Charges) உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், 7 முதல் 17 வயது வரையில் இருக்கும் சிறார்களுக்கு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் விலக்கு இருக்கிறது. இந்த தேதிக்கு முன்பாக ஆதார் சென்டர்களில் பயோமெட்ரிக் அப்டேட் செய்தால், கட்டணம் கிடையாது. இந்த வயதுக்கு மேல் இருந்தால் புதிய கட்டணம் இருக்கும்.

ஆதார் கட்டணம் 2025 (Aadhaar Charges 2025)
1. பிறந்த குழந்தை முதல் 5 வரையில் புதிய ஆதார் கார்டுக்கு ரூ.75 கட்டணம். 5 வயதுக்கு மேல் புதிய ஆதார் கார்டுக்கு ரூ.125 கட்டணம். 5 முதல் 7 வயது வரையில் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்களுக்கு ரூ.125 கட்டணம். இந்த கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வசூலிக்கப்படாது. ஆகவே, இலவமாக சிறார்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்து கொள்ளலாம்.
2. மேலும், 7 முதல் 17 வயது வரையில் இருக்கும் சிறார்களுக்கும் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 கட்டணமாக இருக்கிறது. இந்த கட்டணமும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் வசூலிக்கப்படாது. இந்த விலக்குகள் பொருந்தாதவர்களுக்கு கட்டணம் இருக்கும். இதில் பயோமெட்ரிக், டீமோகிபிக் மற்றும் புதிய பிரிண்ட்அவுட்களுக்கு கட்டணம் உள்ளது.
18 வயது மேல் ஆதார் அப்டேட் கட்டணம்
1. முகம், கருவிழி, கைரேகை ஆகிய பயோமெட்ரிக் அப்டேட்களை செய்ய ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பயோமெட்ரிக் அப்டேட் செய்யும்போதே பெயர், முகவரி போன்ற டீமோகிராபிக் அப்டேட்டையும் செய்து கொள்ள முடியும். ஆகவே, ரூ.125 கட்டணத்திலேயே முடிக்கலாம். டீமோகிராபி அப்டேட்டை தனியாக செய்தால் அதற்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.
2. அடையாள சான்று மற்றும் முகவரி சான்றை அப்டேட் செய்ய ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல ஆதார் கார்டை புதிதாக கலர் பிரிண்ட்அவுட் எடுக்க ரூ.40 கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் சென்டர் அல்லது மொபைல் வழியாக செய்தாலும் இந்த கட்டணங்களாக பொருந்தும். முகவரி அப்டேட்டுக்கு விலக்கு இருக்கிறது.
மேலும், ஆதார் கார்டு ஆப் வழியாகவே மொபைல் நம்பரை மாற்றி கொள்ளும்படியான வசதியை யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிதாக சேர்த்துள்ளது. இந்த மொபைல் நம்பர் அப்டேட் டீமோகிராபிக் அப்டேட்டின் கீழ் வருவதால், இதற்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
* ஆதார் ஆப் டவுன்லோட் செய்து, லாகின் செய்து கொள்ளுங்கள். இதில் மொபைல் நம்பர் வெரிபிகேஷன் மற்றும் முக ஆதன்டிகேஷன் இருக்கும். இதை செய்த பிறகு ஹோம் பேஜ்ஜில் இருக்கும் மை ஆதார் அப்டேட் (My Aadhaar Update) விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இதில் மொபைல் நம்பர் அப்டேட் (Mobile Number Update) இடம்பெற்றிருக்கும்.
* இதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, பழைய மொபைல் நம்பர் காண்பிக்கப்படும். இதற்கு கீழே புதிய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டிய பாக்ஸ் இருக்கும். இதில் சரியாக மொபைல் நம்பரை கொடுத்துவிடுங்கள். இதையடுத்து அந்த நம்பர் ஓடிபி வழியாக வெரிபிகேஷன் செய்யப்படும். பிறகு பேமெண்ட் பக்கம் தோன்றும். ரூ.75 செலுத்தினால் முடிந்தது.
Credit: Gizbot
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications