பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ (Perplexity Pro) சந்தா சலுகையை நிறுத்தி உள்ளது. உடனே "எப்படி நிறுத்தலாம்? ஏன் நிறுத்தலாம்?" என்றெல்லாம் கொந்தளிக்க வேண்டாம். ஏனென்றால் இந்நிறுவனம் நெறிமுறைக்கு புறம்பான எதையும் செய்யவில்லை.
இந்த இலவச சலுகை அறிவிக்கப்பட்டபோது இது குறித்து (இந்த நிறுத்தம் குறித்து) பார்தி ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் நிறுவனத்தின் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சலுகை ஆனது கடந்த 2025 இல் அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், இந்த சலுகை ஜனவரி 16, 2026 அன்று நீக்கப்படும் என்று விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் ஏர்டெல் குறிப்பிட்டிருந்தது.

அதாவது இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக கிடைத்தது. இதை இன்னமும் பெறாதவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக, இனிமேல் இந்த சலுகை கிடைக்காது. நீங்கள் இப்போது பழைய ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தாலும் சரி அல்லது புதிய ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, இந்த பலனை நீங்கள் இனிமேல் கோர முடியாது. பாரதி ஏர்டெல்லின் வலைத்தளத்தில் உள்ள ப்ரீபெய்ட் திட்டப் பட்டியல்களில் இருந்து இந்த இலவச நன்மை நீக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இலவச சந்தைக்கான உரிமையை கோரியுள்ளவர்கள், அதை மீட்டெடுத்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு தொடர்ந்து - பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சந்தா அணுகலை அனுபவிக்க முடியும். ஏர்டெல் பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சலுகை உண்மையில் பயனர்களுக்கு தோராயமாக ரூ.17,000 மதிப்புள்ள பலனை அளித்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
1 ஆண்டுக்கு இலவச அடோப் எக்ஸ்பிரஸ்: பார்தி ஏர்டெல் மற்றும் அடோப் (Adobe) ஆகிய 2 நிறுவனங்களும் ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்து உள்ளன. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, மென்பொருள் நிறுவனமான அடோப் எக்ஸ்பிரஸ் தளத்தின் ஒரு வருட இலவச சந்தாவானது ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.
இதில் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள், எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் டிடிஎச் கனெக்ஷனில் உள்ளவர்கள் என அனைவரும் அடங்குவர். அதாவது இந்த கூட்டாண்மையின் கீழ் அடுத்த 12 மாதங்களுக்கு 360 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு சுமார் ரூ.4,000 மதிப்புள்ள இலவச சந்தாக்களை வழங்கும்
அறியாதோர்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் என்பது ஏஐ அடிப்படையிலான கன்டென்ட் கிரியேஷன் தளமாகும், இது பரந்த அளவிலான டூல்கள் மற்றும் டிசைன் அம்சங்களை வழங்குகிறது. இதுகுறித்த ஒரு செய்திக்குறிப்பில், இரு நிறுவனங்களும் கூட்டாண்மை மற்றும் ஒரு வருட இலவச அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா பற்றிய விவரங்களை அறிவித்தன.
சேவைக்கான அணுகலை ஏர்டெல்லின் தேங்க்ஸ் ஆப்பில் காணலாம், மேலும் இலவச சேவையை செயல்படுத்த எந்த கிரெடிட் கார்டு தகவலும் தேவையில்லை என்று அடோப் நிறுவனம் கூறியுள்ளது. சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு, ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ சந்தாவும் இதேபோன்ற இலவச சேவையாக அணுக கிடைத்தது. அதன் பிறகு இலவச சேவைக்காக ஏர்டெல்லுடன் கூட்டு சேர்ந்த இரண்டாவது நிறுவனம் அடோப் ஆகும்.
அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்துடன், பயனர்கள் மாதத்திற்கு 250 ஜெனரேட்டிவ் கிரெடிட்கள், அனைத்து பிரீமியம் நிலையான மற்றும் வீடியோ டெம்ப்ளேட்களுக்கான அணுகல், 200 மில்லியனுக்கும் அதிகமான ராயல்டி இல்லாத அடோப் ஸ்டாக் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை டிராக்குகள் மற்றும் வடிவமைப்பு கூறுகள், 30,000+ ஃபாண்ட்களுடன் முழுமையான அடோப் எழுத்துருக்கள் சேகரிப்புக்கான அணுகல், வீடியோ பின்னணியை அகற்றுவது மற்றும் 100 ஜிபி கிளவுட் சேமிப்பு போன்ற டூல்களை பெறுவார்கள்.
Credit: Gizbot
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications