பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய 2 தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே அமைதியான முறையில் 2026 விலை உயர்விற்கு (Tariff Hike 2026) பிள்ளையார் சுழி போட்டுள்ள. எங்கே விலைகளை சரிசெய்தால் எதிர்ப்பு குறைவாக இருக்குமோ அங்கே செய்துள்ளன.
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகி இரு நிறுவனங்களும் செய்துள்ள இந்த திருத்தங்கள் வழக்கமானதாகவும், பார்ப்பதற்கு 'சிம்பிள்' ஆகவும் தோன்றுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, 2026 ஆம் ஆண்டிற்கான கட்டண உத்தி எவ்வாறு வடிவம் பெறுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

வோடபோன் ஐடியா பல முக்கிய வட்டங்களில் அதன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மைக்கான நுழைவு புள்ளியை திருத்தியுள்ளது. அதாவது மும்பை, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா போன்ற சந்தைகளில், ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் இனி அன்லிமிடெட் 5ஜி-க்கான அணுகலை வழங்காது; இனிமேல் ரூ.349 தான் பேஸிக் அன்லிமிடெட் 5ஜி டேட்டாகான நுழைவாயிலாக இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் வோடாபோன் ஐடியாவின் ரூ.349 திட்டமானது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற 5ஜி டேட்டா அணுகலையும் வழங்குகிறது. இதோடு சேர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனம் அதன் நீண்ட செல்லுபடியாகும் குளோபல் இன்டர்நேஷனல் ரோமிங் பேக்கின் விலையை ரூ.4000 லிருந்து ரூ.4999 ஆக உயர்த்தி உள்ளது. இதனுடன், பல ப்ரீபெய்ட் இன்டர்நேஷனல் ரோமிங் பேக்குகளின் விலைகளும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நன்மைகளில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
ஆக மொத்தம் ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் கிடைத்த பேஸிக் ஐஆர் ஆக்டிவேஷன் பேக், 1-நாள், 5-நாள் மற்றும் 10-நாள் ரோமிங் பேக்குகள் என அனைத்தும் குறுகிய காலத்திற்குள் அதிக விலைக்கு மாறிவிட்டன. எனவே தான் இதை மிகவும் நுட்பமான ரீசார்ஜ் விலை உயர்வு என்று குறிப்பிடப்படுகிறது.
மேலும் ஏர்டெல் மற்றும் வி - ஆகிய இரண்டு ஆபரேட்டர்களுமே, மேற்கண்ட திட்டங்களில் செய்த மாற்றங்களை கட்டண உயர்வுகளாக நிலைநிறுத்தவில்லை. மாறாக பரந்த விலை நிர்ணய திருத்தத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றன. மேலும் இந்த நகர்வுகளை வடிவமைக்கும் எந்த அறிக்கைகளும் வெளியாகவில்லை
ஆக 2026 ஆம் ஆண்டிற்கான கட்டண இயக்கத்தின் தொடக்க புள்ளி ஆனது வாய்ஸ் நன்மைகளில் அல்லது வெகுஜன டேட்டா பிளான்களில் நிகழவில்லை. மாறாக 5ஜி நெட்வொர்க்கை நிலைப்படுத்தல் மற்றும் சர்வதேச ரோமிங்கில் செய்யப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஏனெனில் இந்த இரண்டு பகுதிகளும் ஒரு குறிப்பிட்ட வகை பயனரின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
அன்லிமிடெட் 5ஜி அணுகல் என்கிற 5ஜி கவரேஜ் ஆனது பயன்படுத்தக்கூடியதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் வட்டங்களில் ஆரம்பகால தத்தெடுப்பாளர்களுக்கு பொருத்தமான ஒரு தேவையாக உள்ளது. சர்வதேச ரோமிங் பேக்குகள் ஆனது அடிக்கடி பயணிப்பவர்கள், வணிக பயனர்கள் மற்றும் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு தேவையானதாக இருக்கிறது.
வோடபோன் ஐடியாவை பொறுத்தவரை, வரம்பற்ற 5ஜி-க்கான நுழைவு புள்ளியாக ரூ.299-ல் இருந்து ரூ.349-க்கு மாற்றப்பட்டதும் - ஒரு வகையான மறுசீரமைப்பு ஆகும். ரூ.299-ஐ இன்னும் பிரபலமான ரூ.349-க்கு நகரும் போது, அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மைக்கான 'விசிபிலிட்டி' அதிகரிக்கும். ஏர்டெல்லை பொறுத்தவரை, ஐஆர் பேக்கிங் விலை உயர்வு - இன்னும் நேரடியானது.
சர்வதேச ரோமிங் வெளிநாட்டு ஆபரேட்டர்களுடனான ஒப்பந்தங்கள், நாணய வெளிப்பாடு மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய தொலைத்தொடர்பு செலவுகளை பொறுத்தது. ஐஆர் பேக் விலைகளை அதிகரிப்பது, சில நூறு ரூபாய் மாற்றங்களுக்கு கடுமையாக எதிர்வினையாற்ற வாய்ப்பு குறைவாக உள்ள ஒரு பிரிவை ஏர்டெல் பணமாக்க அனுமதிக்கிறது. குறிப்பாக செல்லுபடியாகும் தன்மை மற்றும் நன்மைகள் அப்படியே இருக்கும்போது!
மேற்கண்ட மாற்றங்கள் - 5ஜி வெளியீடுகள், ஃபைபர் விரிவாக்கம், டேட்டா சென்டர் வளர்ச்சி மற்றும் ஏஐ அடிப்படையிலான நெட்வொர்க் நுண்ணறிவு ஆகியவற்றில் ஆபரேட்டர்கள் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் நேரத்தில் வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த விலை நிர்ணய திருத்தங்கள் ஆனது மேற்கண்ட எந்த நடவடிக்கைகளின் முதலீடுகளுடனும் பகிரங்கமாக இணைக்கப்படவில்லை என்றாலும், பிரீமியம் பயன்பாட்டு நிகழ்வுகளிலிருந்து வருவாயை மேம்படுத்துவதற்கான பரந்த தேவையுடன் ஒத்துப்போகிறது.
Credit: Gizbot
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications