பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் அடோப் (Adobe) ஆகிய 2 நிறுவனங்களும் ஒரு புதிய கூட்டாண்மையை அறிவித்து உள்ளன. இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக, மென்பொருள் நிறுவனமான அடோப் எக்ஸ்பிரஸ் தளத்தின் ஒரு வருட இலவச சந்தாவானது ஏர்டெல் நிறுவனத்தின் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.
இதில் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள், எக்ஸ்ஸ்ட்ரீம் பயனர்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் டிடிஎச் கனெக்ஷனில் உள்ளவர்கள் என அனைவரும் அடங்குவர். அதாவது இந்த கூட்டாண்மையின் கீழ் அடுத்த 12 மாதங்களுக்கு 360 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு சுமார் ரூ.4,000 மதிப்புள்ள இலவச சந்தாக்களை வழங்கும்.

அறியாதோர்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் என்பது ஏஐ அடிப்படையிலான கன்டென்ட் கிரியேஷன் தளமாகும், இது பரந்த அளவிலான டூல்கள் மற்றும் டிசைன் அம்சங்களை வழங்குகிறது. இதுகுறித்த ஒரு செய்திக்குறிப்பில், இரு நிறுவனங்களும் கூட்டாண்மை மற்றும் ஒரு வருட இலவச அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா பற்றிய விவரங்களை அறிவித்தன.
சேவைக்கான அணுகலை ஏர்டெல்லின் தேங்க்ஸ் ஆப்பில் காணலாம், மேலும் இலவச சேவையை செயல்படுத்த எந்த கிரெடிட் கார்டு தகவலும் தேவையில்லை என்று அடோப் நிறுவனம் கூறியுள்ளது. சுவாரஸ்யமாக, கடந்த ஆண்டு, ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ சந்தாவும் இதேபோன்ற இலவச சேவையாக அணுக கிடைத்தது. அதன் பிறகு இலவச சேவைக்காக ஏர்டெல்லுடன் கூட்டு சேர்ந்த இரண்டாவது நிறுவனம் அடோப் ஆகும்.
அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்துடன், பயனர்கள் மாதத்திற்கு 250 ஜெனரேட்டிவ் கிரெடிட்கள், அனைத்து பிரீமியம் நிலையான மற்றும் வீடியோ டெம்ப்ளேட்களுக்கான அணுகல், 200 மில்லியனுக்கும் அதிகமான ராயல்டி இல்லாத அடோப் ஸ்டாக் புகைப்படங்கள், வீடியோக்கள், இசை டிராக்குகள் மற்றும் வடிவமைப்பு கூறுகள், 30,000+ ஃபாண்ட்களுடன் முழுமையான அடோப் எழுத்துருக்கள் சேகரிப்புக்கான அணுகல், வீடியோ பின்னணியை அகற்றுவது மற்றும் 100 ஜிபி கிளவுட் சேமிப்பு போன்ற டூல்களை பெறுவார்கள்.
இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தை இலவசமாக கொண்டு வர ஏர்டெல்லுடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது இந்தியாவின் துடிப்பான படைப்பாளி பொருளாதாரத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது மற்றும் மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவது, அவர்களின் வணிகங்களை வளர்ப்பது அல்லது அவர்களின் ஆர்வங்களை மேம்படுத்துவது என எதுவாக இருந்தாலும், தனித்துவமான உள்ளடக்கத்தை எளிதாக உருவாக்க உதவுகிறது என்று அடோப்பின் படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித்திறன் வணிகத் தலைவர் டேவிட் வாத்வானி கூறியுள்ளார்.
ஏர்டெல் பயனர்களின் எண்ணிக்கை கூடுகிறது: கடந்த டிசம்பர் 31, 2025 அன்று வெளியிடப்பட்ட டிராய்-ன் தொலைத்தொடர்பு சந்தா தரவுகளின் படி, இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான பாரதி ஏர்டெல் (Airtel), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Jio) ஆகிய அனைத்துமே நவம்பர் 2025 இல் வயர்லெஸ் சந்தாதாரர்களை சேர்ந்துள்ளன
ஆனால் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமானது குறிப்பிட்ட மாதத்தில் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது. அதுவும் 1000, 2000 சந்தாதாரர்களை அல்ல, மொத்தமாக 1,011,134 சந்தாதாரர்களை (10 லட்சம் சந்தாதாரர்களை) இழந்துள்ளது. இந்த புள்ளிவிவரம் ஆனது வோடாபோன் ஐடியா சிம் கார்டுகளை இன்னமும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் எழுப்பி உள்ளது.
இருப்பினும் அக்டோபர் 2025 இறுதியில் 1184.62 மில்லியனாக இருந்த மொத்த வயர்லெஸ் (மொபைல் மற்றும் பிக்ஸடு வயர்லெஸ் அணுகல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை நவம்பர் 2025 இறுதியில் 1187.48 மில்லியனாக அதிகரித்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.24 சதவீதமாக உள்ளது.
அதேபோல், வயர்லெஸ் (மொபைல்) சந்தாதாரர்களின் எண்ணிக்கை அக்டோபர் 2025 இறுதியில் 1171.87 மில்லியனில் இருந்து நவம்பர் 2025 இறுதியில் 1173.88 மில்லியனாக அதிகரித்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.17 சதவீதமாக உள்ளது. மேலும் அக்டோபர் 2025 இறுதியில் 9.91 மில்லியனாக இருந்த மொத்த வயர்லெஸ் (5G FWA) சந்தாதாரர்கள், நவம்பர் 2025 இறுதியில் 10.41 மில்லியனாகவும் அதிகரித்துள்ளனர்.
அதாவது பாரதி ஏர்டெல் 1,215,405 (1.22 மில்லியன்) வயர்லெஸ் சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் 421,514 (0.42 மில்லியன்) சந்தாதாரர்களையும், ரிலையன்ஸ் ஜியோ 1,388,929 (1.39 மில்லியன்) சந்தாதாரர்களையும் சேர்த்துள்ளன. இதற்கிடையில், முன்னரே குறிப்பிட்டபடி வோடபோன் ஐடியா நிறுவனமானது இந்த மாதத்தில் 1,011,134 (1.01 மில்லியன்) வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்துள்ளது.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications