வருமான வரி (Income Tax) செலுத்தும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் இனிமேல் வரி செலுத்துவதற்கு முன்பாக இதை தெரிந்து கொள்ள வேண்டும். கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்கள் (UPI Apps) இருந்தால் மட்டுமே இது பொருந்தும்.
வருமான செலுத்த வேண்டுமானால், வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்லுதல், பேங்க் லாங்கின் செய்தல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். இதை தவிர்க்க, யுபிஐ ஆப்கள் இருந்தால் போதும், அதில் இருந்தே வருமான வரியை செலுத்தி கொள்ளலாம். யுபிஐ ஆப்களுக்கு கட்டணம் விதிக்கப்படாது. ஆகவே, இதில் செலுத்துவது சரியான தேர்வாக இருக்கும்.

1. வருமான வரித்துறையின் ஈ-ஃபில்லிங் போர்டலுக்கு (e-Filling Portal) செல்ல வேண்டும். பிறகு லாகின் செய்ய வேண்டும். லாகின் செய்ய உங்களது பான் கார்டு நம்பரை யூசர் ஐடியாக பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றால், முகப்பு பக்கத்தில் இருக்கும் மின்னணு கட்டண வரி (e-Pay Tax) பக்கத்துக்கு சென்றும் வரி செலுத்தலாம்.
ஆனால், அதில் பேங்குகளின் விவரங்கள் கேட்கப்படும். ஆகவே, லாகின் செய்வது நல்லது. வருமான வரி சலான் உருவாக்க வேண்டும். ஆகவே, மின்னணு கட்டண வரிக்கு சென்று புதிய பேமெண்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். இப்போது வரி வகையை தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும். முன்பண வரி அல்லது சுய மதிப்பீட்டு வரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. பான் நம்பர் மட்டுமல்லாமல், உங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை சரியாக இருக்கிறதா என்பதை பாருங்கள். அதேபோல எந்த நிதியாண்டுக்கு வருமான வரியை செலுத்த போகிறீர்கள் என்பதையும் அதில் குறிப்பிட வேண்டும். இதை செய்த பிறகு எவ்வளவு தொகையை செலுத்த வேண்டும் என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
3. இப்போது, வருமான வரி சலான் காண்பிக்கப்படும். இதில் இருக்கும் விவரங்களையும் சரி பார்த்து கொள்ளுங்கள். இதில் வருமான வரி நிலுவை தொகை இடம்பெற்று இருக்கும் இடத்தில் பேமெண்ட் மோட்கள் (Payment Modes) காண்பிக்கப்படும். இதிலேயே கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளை கொடுக்க வேண்டும்.
4. இந்த யுபிஐ பேமெண்ட் விருப்பதை தேர்ந்தெடுத்தால், கியூஆர் கோட் அல்லது யுபிஐ ஐடி வழியாக வருமான வரியை செலுத்தி கொள்ளலாம். ஆகவே, கியூஆர் கோட் ஸ்கேனிங் வழியாக வழக்கம்போல கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் இருந்து வருமான வரியை செலுத்தி கொள்ளலாம். ஸ்கேன் செய்ய வேண்டும், பின் நம்பர் கொடுக்க வேண்டும்.
அதேபோல யுபிஐ ஐடி நம்பரை கொடுத்து வருமான வரி செலுத்தும் விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், ஐடி கொடுக்கப்பட்ட பிறகு, அந்த ஐடியை கொண்ட யுபிஐ ஆப்புக்கு குறிப்பிட்ட தொகை கேட்கப்பட்டு கேட்வே திறக்கப்படும். இதில் செலுத்த வேண்டிய தொகை மட்டுமே குறிப்பிடப்படும். இதை சரிபார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க வேண்டும்.
இதை செய்தாலும் பின் நம்பர் கேட்கும். இதை கொடுத்த பிறகு வரிமான வரி செலுத்தப்பட்டுவிடும். அவ்வளவுதான் வருமான வரியை செலுத்தி முடித்து விட்டோம். இப்போது வருமான வரி சலானை டவுன்லோட் செய்ய வேண்டும். இதை அதே ஈ-ஃபில்லிங் போர்ட்டல் வழியாக செய்து கொள்ளலாம். அதாவது, லாகின் செய்வுடன் பேமெண்ட் ஹிஸ்டரியில் சலான் இருக்கும்.
இதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த சாலானில் சிஐஎன் (CIN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் சலான் அடையாள எண் (Challan Identification Number) மற்றும் யுடிஆர் (UTR) விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை ஈமெயிலுக்கு அனுப்பியும் கொள்ளலாம் அல்லது பிடிஎப் போல டவுன்லோட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications