இந்த நவீன உலகில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேச நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், மனம் திறந்து பேச ஒருவரும் இல்லாத நிலை அதிகரித்து வருகிறது. இதுவே தனிமையை மேலும் தீவிரமாக மாற்றுகிறது. குறிப்பாக நகர்ப்புற வாழ்க்கை, வேலைப்பளு, போட்டி மனோபாவம் ஆகியவை மனிதர்களை மெதுவாகத் தனிமைக்குள் தள்ளுகின்றன.
அதுவும் நீண்ட கால தனிமை மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். ஆகவே தனிமையைச் சமநிலையுடன் கையாள்வது முக்கியம். நண்பர்களுடன் உரையாடல், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், விருப்பமான செயல்களில் ஈடுபடுதல் போன்றவை தனிமையைக் குறைக்க உதவும்.

இந்நிலையில் நாம் தனிமையிலும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்பதை நமக்கு மிகவும் வேண்டியவர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் சீனாவில் ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது Are You Dead? (சீன மொழியில்: Si Le Me) என்று அழைக்கப்படும் செயலி தான் தற்போது சீனா முழுவதும் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
குறிப்பாக தனிமையில் வசிப்பவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த செயலியைத் திறந்து ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாங்கள் நலமாக இருப்பதை அதில் கொடுக்கப்பட்டுள்ள பொத்தானை அழுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.
ஆனால் பயனர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு (48 மணிநேரம்) மேல் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றால், செயலி தானாகவே அந்த பயனர் பதிவு செய்துள்ள அவசரத் தொடர்பு எண்ணுக்கு (Emergency Contact) மின்னஞ்சல் அல்லது செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தனிமையில் வசிக்கும் சீன மக்களின் தனிமை மற்றும் பாதுகாப்பு கவலையைப் போக்குவதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் தற்போது பல மில்லியன் மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கட்டண செயலியாக (Paid App) கிடைக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்க.
அதன்படி இந்த செயலியின் விலை 8 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.100 முதல் ரூ.115 வரை) ஆகும். மேலும் சர்வதேச சந்தையில் Demumu என்ற பெயரில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தனியாக வசிப்பது அதிகரித்துள்ள நிலையில் தான் இந்த செயலி கொண்டுவரப்பட்டுள்ளது.
சீனாவில் பல்வேறு மக்கள் Are You Dead?" என்ற செயலியின் பெயரை "Are You Okay?" அல்லது "Are You Alive?" என பெயர் மாற்றம் செய்தால் சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த செயலியில் முதியவர்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட புதிய வசதிகளை சேர்க்கவும் அதன் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுபோன்ற செயலி தனிமையில் இருப்பவர்கள் மற்றும் முதியவர்களின் அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் உலகம் முழுவதும் Are You Dead ஒரு சிறந்த செயலி என்ற பாராட்டும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
photo credits: ndtv, indiatoday, AI
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications