சென்னை: பிக் பாஸ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது 98 நாட்களைக் கடந்து இன்னும் சில நாட்களில் கிராண்ட் ஃபினாலே நடக்க இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து சாண்ட்ரா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பிரஜன் மற்றும் சாண்ட்ரா இருவரும் உள்ளே வந்தனர். எந்த சீசனிலும் இல்லாதது போல இந்த சீசனில் தான் கணவன் மனைவி இருவருமே பிக் பாஸ் வீட்டுக்குள் நழைந்தனர். பிக் பாஸ் வீட்டில் அவர் வந்ததுமே சீக்ரெட் டாஸ்க்கை சிறப்பாக விளையாடிய சாண்ட்மரா நல்ல பெயரை எடுத்திருந்தார். பின் கனியுடன் சண்டை, பார்வதியுடன் சண்டை என அடுத்தடுத்து சண்டை போட்டுக் கொண்டே இருந்த சாண்ட்ரா ஒரு கட்டத்தில் பிரஜன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், மூளைக்கு மூளைக்கு உங்காந்து அழுது கொண்டே இருந்தார். இதனால், நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அனைவருமே கடுப்பாகி சாண்ட்ராவை வெளியே அனுப்புங்கள் என இணையத்தில் பதிவிட்டனர்.

பிக் பாஸ் சீசன் 9: அதைத்தொடர்ந்து குடும்ப டாஸ்கில் குழந்தைகளையும், கணவரையும் பார்த்த சாண்ட்ரா அழுவதை நிறுத்திவிட்டு விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் தான் சாண்ட்ராவை கார் டாஸ்கின் போது கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருமே சேர்ந்து எட்டி உதைத்ததால் 'பேனிக் அட்டாக்' வந்ததால், மக்களிடமிருந்து அவருக்கு ஆதரவு பெருகியது. அந்த ஆதரவை வைத்தே சாண்ட்ரா பைனல் வரை சென்று விடுவார், டாப் 5 போட்டியாளர்களில் அவரும் ஒருவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சாண்ட்ரா வெளியேறினார்.
நடிப்பு அரக்கி: இதற்கு காரணம், சாண்ட்ரா காரில் இருந்து விழுந்த போது, 'பேனின் அட்டாக்கே' வரவில்லை. அது ஒரு நாடகம், பேனிக் அட்டாக் வந்தால், நான்கு, ஐந்து மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், சாண்ட்ரா உடனே நார்மலாகி விட்டார். இது எல்லாமே நடிப்பு என்றும், சாண்ட்ராவிற்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம். நடிப்பு அரக்கி என இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். வெளியில் இருந்த சாண்ட்ராவின் கணவர் பிரஜன், என் மனைவி குறித்து மோசமான கருத்துக்களை பதிவிடுவோர் மீது வழக்கு போடுவேன், கம்ருதீனை சும்மா விடமாட்டேன் என பேட்டி அளித்தார். சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணம் பிரஜன் இப்படி பேசியது தான் என கூறப்படுகிறது.
சாண்ட்ரா சம்பளம்: பிக் பாஸ் வீட்டில் 70 நாட்கள் இருந்த சாண்ட்ராவிற்கு ஒரு நாளைக்கு 25 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. சாண்ட்ரா பணப்பெட்டியுன் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மீண்டும் பிரஜன் வீட்டிற்குள் வருவார் வந்ததும் பணப்பெட்டியுடன் வெளியேறி விடலாம் என சாண்ட்ரா நினைத்து இருந்த நிலையில், பணபெட்டியை கானா வினோத் எடுத்துவிட்டார். இதனால்,சாண்ட்ரா வெறும் சம்பளத்துடன் வெளியேறி உள்ளார்.
Credit: Filmibeat


Click it and Unblock the Notifications