பிஎஸ்என்எல் நிறுவனத்தின் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதில் மாதத்துக்கு ரூ.218 செலவில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்காக இந்த திட்டம் மலிவு விலைக்கு கிடைக்கிறது.
குடியரசு தினத்துக்காக மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது பாரத் கனெக்ட் ரூ. 2,026 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாதத்துக்கு ரூ.218 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. இதில் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் வருடம் முழுவதும் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ. 2,626 திட்ட விவரங்கள் (BSNL Rs 2626 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த பாரத் கனெக்ட் திட்டம் (Bharat Connect Plan) இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் வருடாந்திர திட்டங்களுடன் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு கொடுக்கிறது.
இந்த 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். மேலும், நாளொன்றுக்கு 2.6 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது, 2026 ஆம் ஆண்டு குடியரசு தினமாக இருப்பதால், 2.6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இதை 2.6 ஜிபிக்கு பிறகு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இது குடியரசு தினத்துக்கான திட்டமாக இருப்பதால் மட்டுமே இவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கிறது. பிஎஸ்என்எல்லில் வழக்கமாக ரீசார்ஜ் செய்யப்படும் வருடாந்திர திட்டத்தின் விலை ரூ.2,399ஆக இருக்கிறது. இந்த விலைக்கு நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமே வருடம் முழுவதும் கிடைக்கும்.
அதாவது, முந்தைய திட்டத்தை போலவே இந்த பிஎஸ்என்எல் ரூ.2,399 திட்டத்துக்கும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனால், முந்தைய திட்டத்தில் 2.6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா கூடுதலாக கிடைக்கிறது. அதே நேரத்தில் விலையும் மலிவாக கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ. 2,399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2,399 Plan Details): 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, 365 நாட்களுக்கு மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இந்த ப்ரீபெய்ட் திட்டங்களைவிட கூடுதல் டேட்டா வேண்டுமானால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கும் மற்றொரு வருடாந்திர திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் போர்டலுக்கு சென்று வாய்ஸ் வவுச்சரின் கீழ் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை இது கொடுக்கும். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் ரூ. 2,799 திட்ட விவரங்கள் (BSNL Rs 2,799 Plan Details): 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கொடுக்கப்படும். இது அதிக டேட்டா கொண்ட திட்டமாக உள்ளது.
Credit: Gizbot
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications