PF அக்கவுண்ட் இருக்கா? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. ரூ.50,000 வழங்கப்படும்.. உடனே என்னனு பாருங்க..

EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக தொழிலாளர் பணி ஓய்வு பெறும் வரை பிஎப் கணக்கில் ஊழியரும் அவர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் பங்களிப்பு செய்ய வேண்டும்.

இதுதவிர பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. அதேபோல் ஓய்வூதிய பலன்கள், காப்பீட்டு பலன்கள் என பல்வேறு பலன்களை EPFO அமைப்பு தொழிலாளர்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கும் வழங்குகிறது. இந்த நிலையில் காப்பீட்டு பலன்களில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.


PF அக்கவுண்ட் இருக்கா? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு..

பெரிய அளவில் இது பலன்கள்

அதாவது EPFO அமைப்பின் மிகவும் முக்கியமான திட்டம் EDLI எனப்படும் employee deposit linked insurance ஆகும். குறிப்பாக இது தொழிலாளர் வைப்புத் தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இதில் தான் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது EPFO அமைப்பு.

அதன்படி தொழிலாளர் வைப்புத் தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் முன்பு இருந்த கடுமையான நிபந்தனைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆகவே பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரிய அளவில் இது பலன்களைத் தரும்.

தற்போது தொழிலாளர் வைப்புத் தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் வந்த முக்கிய மாற்றம் என்னவென்றால், ஊழியர்கள் பணியின்போது இறந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இனி குறைந்தபட்சம் ரூ.50000 காப்பீடு தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊழியரின் பிஎப் கணக்கில் ரூ.50000 இல்லை என்றால் கூட இந்த காப்பீடு தொகை ரூ.50000 கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.50000 காப்பீடு தொகை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுவும் இந்த புதிய விதிமுறையின் படி ஒரு ஊழியர் பணியின்போது இறந்தால் அவரது நாமினிக்கு குறைந்தபட்சம் ரூ.50000 கிடைக்கும். ஆனால் இதற்கு முன்பு கணக்கில் 50,000 ரூபாய் இல்லாவிட்டால் நாமினிக்கு இறப்பு பலன்கள் கிடைக்காது என்று இருந்தது. தற்போது அதை தான் தளர்த்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒரு ஊழியர் தொடர்ந்து 12 மாதங்கள் வேலை செய்திருந்தால் தான் இந்த காப்பீடு கிடைக்கும் என்பது இதற்கு முன்பு இருந்த விதிமுறை ஆகும். தற்போர் இதையும் நீக்கி உள்ளனர். ஆகவே தொடர்ந்து 12 மாதங்கள் வேலை செய்யாமல் அதாவது ஒரு வருடம் நீங்கள் பிஎப் பங்களிப்பு செய்யாமல் இருந்தால் கூட இந்த குறைந்தபட்ச காப்பீடு தொகை குடும்பத்தினருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


PF அக்கவுண்ட் இருக்கா? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு..

இதுதவிர ஒரு ஊழியர் இரண்டு வேலைகளுக்கு இடையே 60 நாட்கள் வரை இடைவெளி இருந்தால் கூட அது இடைவெளியாகக் கருதப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தொடர்ச்சியான சேவையாகக் கருதுவோம் என்று EPFO அமைப்பு தெரிவித்துள்ளது.

ATM மற்றும் UPI

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, PF கணக்கு வைத்திருப்பவர்கள் ATM-கள் மற்றும் UPI மூலம் பணம் எடுக்கும் முறை மார்ச் 2026 க்கு முன்பு செயல்பாட்டுக்கு வரும் எனவும், இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய மாற்றமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Credit: Gizbot

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+